MiniPod: To be stuffed | Words we use

FINAL_Word We Use  Thumbnail (5).jpg

To be stuffed, to say you're tired, exhausted, or even in trouble.

ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது 'to be stuffed' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.


‘Stuffed’ என்ற சொல் சொற்பொருளில் பார்த்தால், மிகவும் சாப்பிட்டு வயிறு நிறைந்ததால் சங்கடமாக இருக்கும் நிலை என்று பொருள்படும்.

ஆனால் ஆஸ்திரேலியர்களும் பிரிட்டிஷ் மக்களும் இந்த சொற்றொடரை சோர்வாக இருப்பது, களைப்பாக இருப்பது அல்லது பிரச்சனையில் சிக்குவது போன்ற அர்த்தங்களிலும் பயன்படுத்துகிறார்கள்.

அதனால், “to be stuffed” என்ற சொற்றொடரை நாம் பல சூழல்களில் கேட்கலாம். 

நீங்கள் அதிகமாக சாப்பிட்டிருந்தால்:

  • I’m stuffed after that huge lunch!

நீங்கள் பிரச்சனையில் இருந்தால்:

  •  I’m stuffed if I don’t finish this report on time.

நீங்கள் மிகவும் சோர்வாகவோ அல்லது முழுவதும் களைப்படைந்தவராகவோ இருப்பதைச் சொல்ல விரும்பும்போது:

  • I’m stuffed after looking after my niece all day – she has so much energy!

ஏதாவது உடைந்து போயிருந்தாலோ அல்லது சரியாக வேலை செய்யாவிட்டாலோ:

  • I dropped my phone and now it’s stuffed.

வேலைகள் அல்லது பொறுப்புகள் அதிகமாகி திணறும்போது:

  • I’m stuffed this week with all these deadlines.

ஆங்கிலத்தில் Josipa Kosanovic தயாரித்த நிகழ்ச்சியை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now