“எங்களை உடனடி நாடுகடத்தும் வாய்ப்பு இல்லை என்று கூறினர்”

Source: Supplied
மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக குடும்பத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா தம்பதியினரின் இரண்டாவது மகளான இரண்டு வயது குழந்தை தருணிக்காவின் தலையில் உண்டான காயத்திற்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து இந்த குடும்பம் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இது குறித்து மெல்பன் தடுப்பு முகாமிலிருந்து பிரியா நடேசலிங்கம் விளக்கினார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share


