Barossa Valley: ஆஸ்திரேலியாவின் மதுபான மையம்

Source: Scott Davis
இயற்கை ஆர்வலர்களுக்கும், உல்லாச விரும்பிகளுக்கும், சாகசப் பிரியர்களுக்கும், கானுயிர் ரசிகர்களுக்கும், கலாச்சார பண்பாட்டுப் பிரியர்களுக்கும் அவரவர் ரசனைகளுக்குத் தக்கவாறு கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தினை அள்ளி வழங்கும் ஆஸ்திரேலிய மண் மதுபானப் பிரியர்களுக்கு வழங்கும் சொர்க்கம் பரோஸா பள்ளத்தாக்கு. ஆஸ்திரேலியாவின் மதுபான மையம் என்ற பெருமைக்குரியது தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் தலைநகரான அடிலெய்டிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் உள்ள பரோஸா பள்ளத்தாக்கு. இது குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள்.
Share