கோவாலா ஏன் அழிந்துவரும் உயிரினமாகிறது?

Source: SBS
ஆஸ்திரேலியாவின் தனித்துவமான விலங்கான கோவாலாக்கள் அழியக்கூடிய அபாயத்திலிருக்கும் உயிரினங்களில் ஒன்று. கொவாலா ஒரு நாளைக்கு அரைக்கிலோ முதல் ஒரு கிலோ வரை யூகலிப்டஸ் இலைகளைத் தின்னும். கொவாலாக்கள் தண்ணீர் குடிப்பதில்லை. தாங்கள் தின்னும் யூகலிப்டஸ் இலைகளிலிருந்தே தேவையான ஈரப்பதத்தைப் பெற்றுக்கொள்கின்றன. முயலைப் போல் மிகவேகமாக ஓடக்கூடியவை. இப்படியான பல அரிய தகவல்களையும், கோவாலா வாலை இழந்த பூர்வகுடி மக்களின் கனவுக்கால கதையையும் இணைத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share