பெருந்தீவில் ஒரு குட்டித் தீவு!

Source: Geetha
பெரும் தீவு நாடான ஆஸ்திரேலியாவின் ஒரே தீவு மாநிலம் டாஸ்மேனியா. டாஸ்மேனியா மாநிலம் என்பது டாஸ்மேனியா தீவை மட்டும் குறிப்பதல்ல. அதைச் சுற்றியுள்ள 334 குட்டித்தீவுகளையும் உள்ளடக்கியது. இலங்கையை விடவும் சற்றே பெரிய தீவான டாஸ்மேனியா சுமார் 64,000 சதுர கி.மீ. பரப்பளவுடன் உலகின் 26-வது பெரிய தீவாக உள்ளது. இந்த தீவின் வரலாற்றை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.
Share