SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அகதிகள் தொடர்பான அரசின் கொள்கை: கடுமையாகவுள்ளதா? சரியாகவுள்ளதா?

Source: SBS Tamil
இன்று (20 ஜூன்) அகதிகள் தினம்.மட்டுமல்ல,அகதிகள் வாரம் இன்று துவங்குகிறது. அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் தொடர்பான ஆஸ்திரேலிய அரசின் கொளகை மனித உரிமை அமைப்புகளால் பரவலாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளில் அகதிகள் தொடர்பான கொள்கையில் ஆஸ்திரேலியா பாராட்டும் நிலையில் இருப்பதாக அரசு ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அகதிகள் தொடர்பான அரசின் கொள்கை கடுமையாக உள்ளதா? அல்லது அரசின் கொள்கை சரி என்று படுகிறதா என்று கலந்துரையாடுகிறோம். இந்த பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர்: பிரிஸ்பேன் நகரிலிருந்து தபராஜா தயாபரன், பெர்த் நகரிலிருந்து பாஸ்கர் சத்யமூர்த்தி, சிட்னியிலிருந்து சாரதா ராமநாதன் மற்றும் செல்வா ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share



