இந்தோனேஷியாவிலிருந்து சுமார் 60 பேரை ஏற்றிக்கொண்டு மலேசியா சென்ற படகு ஒன்று மலேசியக் கடற்கரைக்கு அண்மையில் கவிழ்ந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஏனையோரைத் தேடும் நடவடிக்கை இன்னும் நடைபெற்றுவருகிறது.
இந்தச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
படகில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இந்தோனேஷியர்கள் என்றும் மூர்க்கமான அலை தாக்கியதில் படகு கவிழ்ந்திருக்கிறது என்றும் மலேசிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மலேசிய தொழில் ஆலைகளிலும் பண்ணைகளிலும் வேலைசெய்வதற்காக ஆண்டு தோறும் ஒன்று முதல் இரண்டு லட்சம் இந்தோனேஷியர்கள் சட்டவிரோதமாக வருகிறார்கள் என்றும் இவர்களை ஆட்கடத்தல்காரர்கள் பெரும் எண்ணிக்கையில் படகுகளில் ஏற்றுவதால் தொடர்ச்சியாக இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்றும் ஜகார்த்தாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
