SKIP TO MAIN CONTENT

10 நிமிட விண்வெளிப்பயணத்திற்கு 28 மில்லியன் டாலர்களைச் செலவிடும் தனிநபர்!

10 நிமிட நேரம் மட்டுமே நீடிக்கும் விண்வெளிப்பயணமொன்றுக்கு 28 மில்லியன் டாலர்களைத்தர ஒருவர் முன்வந்திருக்கிறார்.

Bidding Opens for a Seat on Blue Origin’s First Passenger Space Flight
Source: The New York Times

5 min read

Published

By R.Sathiyanathan


Skip to article content

கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் online என்ற இணையவழியான auction-ஏலம் விடப்பட்டபோது இதுவரை பெயர் அறிவிக்கப்படாத ஒரு நபர் Blue Origin விண்கலத்தில் விண்வெளிக்கு பயணிப்பதற்காக இந்தத் தொகையை தர ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த ஏலம் கடந்த ஒருமாதமாக இணைய வழியாக நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை இறுதிநாள் என்ற வகையில் அதுவரை உச்சபட்சமாக 5 மில்லியன் டொலர்களையே எட்டியிருந்தது.

ஆனால் கடைசி நாளான சனிக்கிழமையன்று ஏலம் ஆரம்பிக்கப்பட்ட ஆறாவது நிமிடத்தில் ஏலத்தொகை 28 மில்லியனை எட்டியதோடு ஏலம் முடிவுக்கு வந்தது. 150 நாடுகளில் இருந்து 7600 பேர் இந்த ஏலத்தில் கலந்து கொண்டார்கள்.

இந்த விண்வெளிப் பயணம் அடுத்த மாதம் 20 ஆந்திகதி இடம்பெறவிருக்கிறது. விண்கலத்தில் மொத்தம் 4 பேர் பயணிக்க உள்ளார்கள்.

Bezos Will Fly Aboard Blue Origin’s First Human Trip to Space
Source: The New York Times

Amazon நிறுவனத்தின் ஸ்தாபகரும் தற்போதைய CEO வும் கோடீஸ்வரர்களுள் ஒருவருமான Jeff Bezosஆல் நிறுவப்பட்ட Aerospace Manufacturing and Space Flight Services நிறுவனம்தான் Blue Origin என்ற நிறுவனம்.

இந்த நிறுவனம் VTVL - vertical take off and vertical landing என்ற அடிப்படையில் அதாவது செங்குத்தாக மேலே சென்று செங்குத்தாக பூமிக்கு வந்தடையக்கூடிய, rocket powered ஏவுகணைகளின் உதவியுடன் capsules என்ற கலங்களை suborbital and orbital space என்ற விண்வெளிப்பரப்பிற்கு அனுப்பும் தொழில் நுட்பத்தை விரிவுபடுத்திவருகிறது.

இதற்கு பயன்படுத்தப்படும் ஏவுகணைகள் அல்லது Boosterகள், reusable என்ற வகையில் விமானங்களைப்போல மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிவையாகும். Orbital அல்லது Suborbital பகுதி என்பது புவியீர்ப்பு விசை முடிவடைந்து புவியீர்ப்பு விசையற்ற விண்வெளிப்பரப்பு ஆரம்பமாகும் எல்லைப்பகுதியாகும்.

ஜூலைமாதம் 20ஆந்திகதி Texas தளத்திலிருந்து புறப்படும் இந்த கலத்திற்கு New Shepard என்று பெயரிடப்பட்டிருக்கிறது.முதன்முதலில் விண்வெளிக்குச்சென்ற அமெரிக்கரான Alan Shepard ஐ நினைவுகூரும் விதமாக பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை அல்லது booster இதற்கு முன் 15 தடவைகள் sub orbital பகுதிக்குச் சென்றிருக்கிறது. பயணிகளுடன் செல்வது இதுதான் முதல் தடவை.

NASA selected Alan Shepard as one of its first seven astronauts in 1959.
NASA selected Alan Shepard as one of its first seven astronauts in 1959. Source: NASA

இந்த booster ஏவுகணை மிக நம்பகமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதோடு இந்த ஏவுகணையில் ஏதும் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக இதன் capsule என்ற பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதி கழன்று விடுபட்டு parachute இன் உதவியுடன் பூமிக்கு வந்து சேரும். 60 அடி நீளமான இந்த ஏவுகணையின் தலைப்பக்கமாக உச்சியில் ஆறு பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய capsule என்ற கலம் இணைக்கப்பட்டிருக்கிறது.

பூமியிலிருந்து 76 கி. மீட்டர் உயரம் செங்குத்தாக மேலே சென்றபின்பு ஏவுகணை, கலத்திலிருந்து பிரிந்து செங்குத்தாக பூமிக்கு வந்து சேரும். ஆனால் ஏற்கனவே பெற்றிருந்த விசையின் உதவியுடன் capsule என்ற கலம் மேலும் 30 கி. மீட்டர் மேலேசெல்லும். அதாவது பூமியிலிருந்து சுமார் 100 கி. மீ உயரம் செல்லும். அதன்பின்பு அதனுடன் இணைக்கப்பட்டுள்ள parachute இன் உதவியுடன் West Texas பாலைவனப்பகுதிக்கு வந்து தரையிறங்கும் .

சாதாரண பயணிகள் விமானங்கள் சுமார் 5 தொடக்கம் 7 மைல் உயரம் மட்டுமே அதாவது 8 தொடக்கம் 11 கி. மீட்டர் உயரம் பறக்கக்கூடியவை. ஆனால் இந்த capsule பூமியிலிருந்து 100 கி. மீட்டர் உயரம் செல்லும்.

பூமியிலிருந்து 100 கி. மீட்டர் உயரம் செல்லும்போது அங்கு gravity என்ற புவியீர்ப்புச்சக்தி இருக்காது. இதை microgravity என்று சொல்வார்கள். இந்த microgravity என்ற சூழலை இந்த கலத்தில் பயணிக்கும் பயணிகள் உணர்வார்கள்; அனுபவிப்பார்கள். அத்தோடு இந்த கலத்தில் இருக்கும் 6 பெரிய ஜன்னல்களின் வழியாக பூமியை இவர்கள் பார்ப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அங்கிருந்து பார்க்கும்போது பூமி நீலநிறமும் வெள்ளை நிறமும் கலந்த ஒரு marble உருண்டையைப்போல இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

The booster of the New Shepard rocket
Blue Origin rocket company has shot a capsule higher into space. Source: AAP

இந்த கலத்தில் மொத்தம் நான்குபேர் பயணிக்கவிருக்கிறார்கள். Amazon நிறுவனத்தினதும் மற்றும் Blue Origin நிறுவனத்தினதும் அதிபரான Jeff Bezos, மற்றும் அவரது சகோதரர் Mark Bezos அத்தோடு இரண்டு நபர்கள்- ஒருவர் 28 மில்லியன் டாலர்களைச்செலுத்தி ஏலத்தில் தனது இருக்கையை பதிவுசெய்துள்ள நபர் மற்றும் பெயர் அறிவிக்கப்படாத மற்றொரு நபர் என்று நான்கு பேர் இந்த பயணத்தில் இணைகிறார்கள்.

ஏலம் விடப்பட்டு பெறப்பட்ட 28 மில்லியன் டாலர்கள் Blue origin Foundation என்ற அமைப்பிற்கு வழங்கப்படும் என்றும் எதிர் காலச்சந்ததியின் Club for the future என்ற திட்டத்தின்கீழ் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இது பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எதிர்காலத்தில் வர்த்தக அடிப்படையில் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் திட்டத்தின் முன்னோடித்திட்டமாக இது அமைகிறது. ஆனால் விண்வெளிக்குச்சென்றுவர ஒருவருக்கு என்ன செலவாகும் என்பது அறிவிக்கப்படவில்லை. இது சில மில்லியன் டாலர்களாக இருக்கக்கூடும் என்ற ஊகங்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள Amazon நிறுவனர் Bezos, தனது நிறுவனம், Blue Origin இன் செயல்பாட்டிற்காக வருடாந்தம் 1 பில்லியன் டாலர்களைச் செலவிட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் பலரை ஏற்றிச்செல்லக்கூடிய கலங்களையும் பெரிய சக்திமிக்க ஏவுகணை- boosters களையும் வடிவமைத்து வர்த்தக அடிப்படையில் செய்மதிகளை விண்வெளிக்கு அனுப்பவும் பயணிகளை orbital பகுதிக்கும் அதற்கு மேலேயும் அழைத்துச் செல்வதுமே நீண்டகாலத்திட்டம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதில் பயணஞ்செய்வதற்கு astronauts என்ற பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் தேவைப்படமாட்டார்கள் என்றும் civilians என்ற சாதாரண பொதுமக்களுக்கான, அரசாங்கத் தலையீடு மற்றும் பங்களிப்பு இல்லாத செயல்பாடு இது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Virgin Galactic space tourism
Source: AAP

Virgin நிறுவனத்தின் Richard Branson மற்றும் Tesla நிறுவனத்தின் Elon Musk போன்றோர் இதேபோன்ற திட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். Virgin நிறுவனம் தனது நிறுவனத்தின் விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் அடங்கிய குழுவினரை விண்வெளிக்கு அழைத்துச்சென்றுள்ளது. பொதுமக்களுள் யாரையும் அழைத்துச்சென்றதில்லை. அதேபோல அமெரிக்க மற்றும் ரஷ்ய அரசுகள் விண்வெளிக்கு நபர்களை அழைத்துச்சென்றுள்ளன. ஆனால் அந்த பயணங்கள் யாவும் அரசாங்கத் திட்டங்களின் அடிப்படையில் அமைந்தவை மட்டுமல்ல, அவற்றை இயக்கியது பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்களாவர்.

Blue origin இன் இந்த விண்வெளிப்பயணம் பற்றிய அறிவித்தல் வந்த பின்பு Virgin நிறுவனத்தின் நிறுவனர் Branson அதற்கு முன்னதாக ஜூலை நான்காந்திகதி விண்வெளிப்பயணம் செல்லப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை.

Elon Musk இன் SpaceX நிறுவனம் விண்வெளிவீர்ர்களை NASA வின் International Space Station என்ற சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. வர்த்தக அடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் பொதுமக்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அது அறிவித்திருக்கிறது.

எப்படியிருந்தபோதும் தனது நிறுவனத்தின் ஏவுகணை மற்றும் விண்கலத்தின் மீது அதீத நம்பிக்கைகொண்டு அதில் பயணஞ்செய்த நிறுவனர் என்ற வகையில் Bezos இன் பெயர் வரலாற்றில் பதிவாகும்.

USA spce programes Jeff Bezos
Source: AAP

‘நீங்கள் விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும் போது உங்களுக்குள் ஏற்படும் மாறுபாட்டை நீங்கள் உணர்வீர்கள். உங்களுக்கும் இந்த பூமிக்குமான மனிதாபிமான உறவு மேம்படும். இது ஒரே பூமி- it’s one earth’ என்று அவர் தனது Instagram பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். ‘இந்த கலத்தில் நான் பயணிக்கவேண்டும்; இது எனது வாழ்நாள் கனவு; இது எனது பெரிய சாதனை’ என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now