ஆஸ்திரேலியாவின் Biosecurity Act 2015 -உயிரியல் பாதுகாப்பு சட்டம் 2015 திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன் இச் சட்டத்தை மீறுபவர்களுக்கான அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய திருத்தப்பட்ட உயிரியல் சட்டத்தின்படி தான் கொண்டு வந்த பன்றி இறைச்சி மற்றும் பாலாடைக்கட்டிகள் ஆகியவற்றை பிரகடனம் செய்யத்தவறியதற்காக அந்த Spain பயணியின் வீசா ரத்து செய்யப்பட்டு மேலும் $3,330 அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை 20 வயதான அந்த நபர் பெர்த் விமான நிலையத்தில் 275 கிராம் வர்த்தகம் அல்லாத பன்றி இறைச்சி மற்றும் சுமார் 300 கிராம் Goat cheese ஆட்டு பாலில் செய்யப்பட்ட பாலடைக்கட்டிகள் ஆகியவற்றை அவர் declare - அறிவிக்க தவறிவுள்ளார்.
பெடரல் அரசால் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இப்புதிய சட்டத்திருத்தத்தின்கீழ், தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்கள் உட்பட, உயிரியல் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை திருட்டுத்தனமாக ஆஸ்திரேலியாவிற்குள் எடுத்துவருபவர்கள் மற்றும் அவற்றை பிரகடனம் செய்யத்தவறுபவர்களுக்கான on the spot அபராதம் $2,664 டொலர்களிலிருந்து $5,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது அதோடு அவர்களின் வீசாவும் ரத்து செய்யப்படும்.
மிகக் கடுமையான விதிமீறல்களைச் செய்வோர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு 266,400 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படக் கூடும்.

The man was stopped at Perth airport last Tuesday. Source: AAP / Richard Wainwright
ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின்கீழ் சில பொருட்களை நாட்டுக்குள் எடுத்துவரமுடியாது. அவ்வாறான பொருட்கள் எமக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்துறைக்கு அவை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
Agriculture.gov.au என்ற இணையத்தளத்தில் ஆஸ்திரேலியாவிற்குள் என்னென்ன பொருட்களைக் கொண்டுவரலாம் என்னென்ன பொருட்களைக் கொண்டுவர முடியாது என்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து வரும்போது அனைத்து பயணிகளும் Incoming Passenger Card-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். உணவுப் பொருட்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பான பொருட்கள் போன்ற உயிரியல் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை declare- பிரகடனப்படுத்த வேண்டும்.
Biosecurity அதிகாரிகள் நீங்கள் பிரகடனம் செய்த பொருட்களை நாட்டுக்குள் அனுமதிக்க முடியுமா இல்லையா என்பதை ஆய்வுசெய்து முடிவெடுப்பார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.