ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து பல வருடங்களாக சிட்னியில் வசித்து வந்த Govind Kant (வயது 47) என்பவரே இவ்வாறு கோவிட் தொற்றுக்கு உள்ளாகி கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் இறந்துள்ளார்.
சிட்னியில் தனியார் நிறுவனமொன்றின் உதவிப்பணிப்பாளராக பணிபுரிந்து வந்த Govind Kant கடந்த ஏப்ரலில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா சென்றிருந்தார் என்றும் அப்போது அங்கு கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களுக்கு முன்னரே ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த Govind Kant 2002 இல் சிட்னி Macquarie பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவுசெய்திருந்தார். இவருக்கு ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை உள்ளது.
Govind Kant இறந்த செய்தியை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள அவரது வேலைத்தளம், அவரது குடும்பத்தினருக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

Trina Solar paid tribute to the 47-year-old Sydney businessman in a Facebook post. Source: Facebook
சில வாரங்களுக்கு முன்னர் 59 வயதான ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை உள்ள ஒருவரும் இந்தியாவுக்கு சென்றிருந்த சமயம் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி டில்லியில் பலியாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.