Highlights
- இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டவர்களில் ஒருவருக்கு கோவிட் தொற்று.
- குறித்த நபர் சனிக்கிழமை இரவு இந்தியாவிலிருந்து டார்வினை வந்தடைந்த சிறப்பு விமானத்தில் பயணம்செய்திருந்தார்.
- இந்தியாவிலிருந்து மற்றுமொரு தொகுதி ஆஸ்திரேலியர்கள் இவ்வாரம் ஆஸ்திரேலியா வருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் பேரவலத்திற்குள் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையின் முதற்கட்டமாக சுமார் 78 பேர் சிறப்பு விமானம் மூலம் டார்வின் அழைத்துவரப்பட்டிருந்தநிலையில் இவர்களில் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனையோரும் மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கான சிறப்பு விமானத்தில் பயணிக்கவிருந்தவர்கள் இரு தடவைகள் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டபின்னரே விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்தியாவில் சிக்கியுள்ளவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது சிறப்பு விமானத்தில் சுமார் 150 பேர் பயணிக்கவிருந்தபோதிலும் அவர்களில் பலருக்கு கோவிட் தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களும் தொற்றுக்கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் குறித்த விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About 80 Australians who were stranded in coronavirus-ravaged India touched down in Darwin on the first post-ban repatriation flight. Source: Royal Australian Air Force
இதேவேளை இந்தியாவில் சிக்கியுள்ள மேலும் ஒருதொகுதி ஆஸ்திரேலியர்களை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு விமானம் இந்தவாரம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.