SKIP TO MAIN CONTENT

மேற்கு ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாமில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் மரணம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் Yongah Hill குடிவரவு தடுப்புமுகாமிலிருந்த இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக Refugee Action Coalition தெரிவித்துள்ளது.

Yongah Hill Immigration Detention Centre in Northam, Western Australia
Yongah Hill Immigration Detention Centre in Northam, Western Australia Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

துருக்கிய பின்னணி கொண்ட 32 வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞர் துருக்கிக்கு நாடுகடத்தப்படும்நோக்கில், கடந்த 3 ஆண்டுகளாக பெர்த்திற்கு அருகிலுள்ள இத்தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக Refugee Action Coalition தெரிவித்துள்ளது.

நேற்றிரவு குறித்த தடுப்புமுகாமிலிருந்த மற்றொரு நபருடன் ஏற்பட்ட மோதலின்போதே இவ்விளைஞர் கத்திக்குத்துக்கு இலக்கானதாக குறிப்பிடப்படுகிறது.

தடுப்புமுகாமிலுள்ள பெரும்பாலானவர்களின் விசாக்கள் குடிவரவுச்சட்டம் பிரிவு 501-இன் கீழ் நடத்தை(Character) அடிப்படையில் ரத்துசெய்யப்பட்டு நாடுகடத்தப்படும் நோக்கில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஆஸ்திரேலிய நீதி அமைப்பின் கீழ், குற்றம் இழைத்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்த பின் விடுவிக்கப்படுவதாகவும், ஆனால் குடிவரவு தடுப்புமுகாமைப் பொறுத்தவரை அதற்கு வழியில்லை எனவும், காலவரையறையின்றி தடுத்துவைக்கப்படும் பலர் தற்கொலை, கொலை போன்றவற்றினால் தமது உயிர்களைக்கூட இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் Refugee Action Coalition-இன் Ian Rintoul  தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாம்களில் இடம்பெறும் தற்கொலைச் சம்பவங்கள், தற்கொலை முயற்சிகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now