SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிக்க புதிய AI கமரா!

வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவதைக் கண்டறியும் கமராக்களுக்குப் பொறுப்பான மெல்பன் நிறுவனம், மது மற்றும் போதைப்பொருளால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களைக் கண்டறிய புதிய கமராக்களை உருவாக்கி வருகிறது.

Traffic Camera
Traffic Camera-File Image Source: AP

1 min read

Published

Updated

By Renuka

Source: SBS


Skip to article content

கைபேசி பாவனையை கண்டறியும் கமராக்களுக்கு மிகவும் பிரபலமான Acusensus நிறுவனம், போதைப்பொருள் மற்றும் மதுவால் பாதிக்கப்பட்ட ஓட்டுனர்களைக் கண்டறியும் கமராக்களை உருவாக்கி வருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளில் இவற்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது.

Acusensus நிறுவனம், சாலைப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் Griffith பல்கலைக்கழகத்துடன் இணைந்து Artificial Intelligence(AI) அடிப்படையிலான தொழில்நுட்பத்தை உருவாக்கி, ஓட்டுநரின் கவனம், எதிர்வினை நேரம், கட்டுப்பாடு நிலைகளை நிகழ்நேரத்தில் அளவிடுவதன்மூலம் இக்கமராக்களை உருவாக்குகின்றது.

வேகம், பாதை வடிவங்கள் மற்றும் பாதைகளுக்குள் மேற்கொள்ளப்படும் பக்கவாட்டு இயக்கங்கள் போன்ற ஓட்டுநர் நடத்தைகளைப் பயன்படுத்தி, இந்தத் தொழில்நுட்பம், காவல்துறை அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கவும் மேலும் நடவடிக்கை எடுக்கவும் தகவலை அனுப்ப முடியும்.

போதைப்பொருள் அல்லது மதுவின் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை குறைப்பதே இந்தத் தொழில்நுட்பத்தின் குறிக்கோள் என்று Acusensus நிறுவனம் கூறுகிறது.

2018 இல் நிறுவப்பட்ட Acusensus நிறுவனம் தற்போது சிட்னி, மெல்பன், பிரிஸ்பேன், UK மற்றும் லாஸ் வேகாஸில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியாவில் சாலைவிதிமீறல்களில் ஈடுபடுபவர்களைக் கமரா மூலம் கண்டுபிடிக்கும் திட்டங்களுக்கு Acusensus நிறுவனம் பொறுப்பாகவுள்ளது.

NSW Mobile Phone Detection Camera  திட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, கமரா மூலம் கண்டறியப்பட்ட கைபேசி பாவனை தொடர்பிலான குற்றங்களில் ஆறு மடங்கு குறைப்பும், சாலை விபத்துகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக இந்நிறுவனம் கூறுகிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது

tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now