Covid 19 இற்கு எதிராக, Vaccine எனப்படும் தடுப்பு மருந்துகள் பல இன்று பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. நோயை ஏற்படுத்தும் வைரஸ்கள் நமது உடலினுள் புகுந்து நிலைகொள்வதைத்தடுக்கும் ஆற்றலை - அதாவது வைரஸ்களை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இந்த தடுப்புமருந்துகள் நமது உடலில் ஏற்படுத்துகின்றன. இதை immunity அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி என்று நாம் சொல்கிறோம்.
இந்த தடுப்புமருந்துகள் பயன்பாட்டுக்கு வராத ஒரு கால கட்டம் இருந்தது. இதனால் பலர் தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்ள முடியவில்லை. அதேபோல இப்போது தடுப்பு மருந்துகள் இருந்தபோதும் அது எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதாக இல்லை; கிடைக்கக்கூடியதாக இருந்தால் கூட பலர் தடுப்புமருந்துகளைப் போட்டுக்கொள்ள முன்வருவதில்லை - என்ற பல்வேறுபட்ட சூழ்நிலைகள் இருக்கின்றன.
ஒருவரது உடலுக்குள் வைரஸ்கள் புகுந்து நிலைகொண்டுவிட்டால் அந்த வைரஸை அழிக்கும் நோயெதிர்ப்புச்சக்தி ஒருவருக்கு இல்லாத நிலையில், அவர் இந்த வைரஸின் பாதிப்பால் கடுமையான நோய்வாய்ப்படவோ அல்லது இறக்கவோ நேரிடுகிறது.

Colorized scanning electron micrograph of a cell (blue) heavily infected with SARS-CoV-2 virus particles (red). Source: Getty
நோய்க்கிருமிகளை அழிக்க antibiotics என்ற மருந்துகளை நாம் காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம். ஒரு குறிப்பிட்ட நோயைக் குணமாக்க ஒரு குறிப்பிட்ட antibiotic ஐ பயன்படுத்துகிறோம். அதேபோல ஒரு குறிப்பிட்ட வைரஸை அழிக்க ஒரு குறிப்பிட்ட anti viral மருந்தைப்பயன்படுத்துவதும் புதிதல்ல. ஆனால் covid 19 வைரஸ அழிக்க பிரத்தியேகமான antiviral மருந்துகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் இதுபற்றிக் குறிப்பிடும்போது, ‘தடுப்புமருந்துகள் பல வந்துவிட்டன; ஆனால் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த நேரடியான antiviral மருந்துகள் இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.
மலேரியா வைரஸ், இபோலா வைரஸ் போன்ற வைரஸ்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சில antiviral மருந்துகள் பரீட்சித்துப் பார்க்கப்பட்டபோதும், அவை பூரண பயனைத்தரவில்லை. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட hepatitis மற்றும் சாதாரண சளிச்சுரம் என்பவற்றுக்கான Remdesivir , சளிச்சுரத்திற்கு பயன்படுத்தப்படும் Zanamivir போன்ற antiviral மருந்துகள் ஓரளவு பயன்தருவதாக சொல்லப்பட்டாலும் அதற்கான மருத்துவ ரீதியான சான்றுகள் போதுமானதாக இல்லை.

Source: Griffith University
ஆகவே covid 19 இற்கான தடுப்புமருந்தைக் கண்டுபிடித்தது போல, நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குணமாக்க பிரத்தியேகமான antiviral மருந்துகளைக் கண்டு பிடிக்கவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
நோய்வராமல் தடுக்க vaccine; நோய்வந்தால் குணப்படுத்த antiviral. Vaccine -நோய் வருமுன் காப்போன்; antiviral -நோய் வந்தபின் காப்போன்.
இந்தச் சூழ்நிலையில் தான் குயின்ஸ்லாந்து Griffith பல்லைக்கழக நிபுணர்களும் அமெரிக்க நிபுணர்களும் இணைந்து covid 19 வைரஸுக்கு எதிரான antiviral மருந்தொன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பது மருத்துவ விஞ்ஞான உலகில் மிகப் பரபரப்பான செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த antiviral மருந்து எப்படி செயல்படுகிறது?
‘Seek and destroy mission’ என்று இராணுவ தாக்குதல் முறை ஒன்று இருக்கிறது. ‘எதிரிகளைத் தேடிக் கண்டுபிடித்து அழிப்பது’ என்பது இதன் பொருள். இதே அடிப்படையில், எதிரியான வைரஸ்களைத் தேடிக் கண்டுபிடித்து அழிப்பதுதான் இந்த antiviral மருந்தின் அணுகுமுறை’ என்று இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்குபவரும் Griffith பல்கலைக்கழக பேராசிரியருமான Nigel McMillan தெரிவித்திருக்கிறார்.

Source: Griffith University
Menzies Health Institute of Queensland மற்றும் City of Hope, United States Research Institute என்பன இணைந்து சென்றவருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பித்த இந்த ஆராய்ச்சிகளின் பயனாக, இந்த புதிய antiviral மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. Covid 19 வைரஸ் உடலுக்குள் செலுத்தப்பட்ட எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த மருந்து 99.9 சதவீதமான வைரஸ்களை நிர்மூலமாக்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
Gene silencing RNA technology என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் இந்த மருந்து covid 19 வைரஸ்களின் genome என்ற மரபணுத்தொகுதியைத் தாக்கி அவை இரட்டிப்பதை அதாவது பல்கிப் பெருகுவதைத் தடுக்கிறது. Nano particles என்ற மிகச்சிறிய துகள்கள் வடிவத்தில் உடலுக்குள் செலுத்தப்படும் இந்த மருந்து, வைரஸ்களைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்கிறது என்று பேராசிரியர் McMillan தெரிவித்தார். சுவாசப்பைகளில் நுழையும் இந்த சிறுதுகள்கள் அங்கிருக்கும் எல்லாக் கலங்களுக்குள்ளும் நுழையும். இந்தக் கலங்களிலுள்ள வைரஸ்களை மட்டும் அழிக்கும் என்கிறார் அவர்.

Source: Griffith University
இந்த மருந்து மாத்திரை வடிவில் அமைந்ததா அல்லது ஊசி மூலம் ஏற்றப்படவேண்டியதா?
இந்த மருந்து ஊசிமூலமாகவே ஏற்றப்படும். கடுமையான நோய்வாய்ப்பட்டு ICU என்ற தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தினமும் ஒரு ஊசி மருந்து என்ற அடிப்படையில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஏற்றப்படும். வைரஸ் உடலில் இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட ஆனால் கடுமையாக நோய்வாய்ப்படாதவர்களுக்கு ஒரு ஊசி மட்டும் ஏற்றப்படும்.
இந்த மருந்து இப்போது பொதுவாகப் பேசப்படுகிற variant என்ற உருமாறிய வைரஸ்களையும் அழிக்குமா?
ஆமாம். இந்த மருந்து beta coronavirus குடும்பத்திலுள்ள original SARS வைரஸ் என்ற SARS-CoV-1, SARS - CoV-2, MERS வைரஸ், மற்றும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய இந்த வைரஸ்களின் variant என்ற உருமாறிய வைரஸ்களையும் அழிக்கக்கூடியது என்று இந்த ஆராய்ச்சியின் இணைத்தலைவரான பேராசிரியர் Kevin Morris தெரிவித்திருக்கிறார்.

Source: Griffith University
இந்த மருந்து clinical trials என்ற ஆய்வு கட்டங்களைத்தாண்டிவிட்டதா? எப்போது பாவனைக்கு வரும்?
இல்லை. மனிதருக்கு பரிசோதித்து உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் phase 1, phase 2 மற்றும் phase3 clinical trials இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் இந்த மருந்தின் ஆற்றல் குறித்து ஆராய்ச்சியாளர்கள் பெரு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். சாதாரண fridge களில் இந்த மருந்தை ஒருவருட காலம்வரை பத்திரப்படுத்தமுடியும்.
2023 ஆரம்பப் பகுதியில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு பரவலாக வரும் என்றும் இங்கு ஆஸ்திரேலியாவில் இதைத் தயாரிப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்கமுடியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.