SKIP TO MAIN CONTENT

எங்கே வீடு வாங்கலாம் என்பதைக் கண்டறிய இலகுவான வழி!

உங்களது முதலாவது வீட்டை வாங்குவதற்கு திட்டமிடுகிறீர்களா?

house sold
Signage for a real estate property Source: AAP Image/James Ross

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவில் எந்த இடத்தில் வீடு வாங்கலாம் என்பதை இலகுவாக கண்டறியும்வகையில்  Suburb Spotter Map ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Mortgage broker நிறுவனமான Aussie இந்த  Suburb Spotter Map-ஐ வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர் ஒருவர் தன்னிடமிருக்கும் வைப்புத்தொகை மற்றும் ஒரு பிரதேசத்திலுள்ள வீடுகளின் சராசரி விலை என்பவற்றின் அடிப்படையில் அந்த வாடிக்கையாளர் எங்கே வீடு வாங்கமுடியும் என்பதை குறித்த map ஊடாக கண்டறிய முடியும் என குறிப்பிடப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் தமது கனவு இல்லத்தை வாங்க முற்படுபவர்கள் அதை எங்கே வாங்குவது என்பது தொடர்பில் குழப்பத்திற்கு உள்ளாவது வழக்கம் எனவும் இப்படியானவர்களுக்கு உதவும் நோக்கிலேயே Suburb Spotter Map-ஐ வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Suburb Spotter Map-ஐ இந்த இணைப்பில் பார்வையிடலாம்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now