ஆஸ்திரேலிய அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது!

ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கிடையில் எட்டப்பட்டுள்ளது.

New Zealand Prime Minister Jacinda Ardern stands with Australian Prime Minister Scott Morrison in 2020.

New Zealand Prime Minister Jacinda Ardern stands with Australian Prime Minister Scott Morrison in 2020. Source: Getty Images

குறித்த திட்டத்திற்கு, ஆஸ்திரேலியா ஏற்கனவே 'கொள்கையளவில்' இணக்கம் தெரிவித்திருந்த பின்னணியில், இது குறித்த இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா- நியூசிலாந்து நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வருடமொன்றுக்கு 150 அகதிகள் என்ற அடிப்படையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுமார் 450 அகதிகள் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படவுள்ளனர்.

தற்போது நவுறுவிலுள்ள அகதிகள், மற்றும் கடல்கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு இங்கு தற்காலிக விசாவுடன் தங்கியுள்ள அகதிகள், இந்த ஒப்பந்தத்தின்கீழ் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதற்கு தகுதிபெறுவர்.

அந்தவகையில் நவுறுவில் சுமார் 112 பேரும், ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துவரப்படவர்களில் 1168 பேரும் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா போன்ற மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்தப்படுவதற்கு  தெரிவுசெய்யப்பட்டவர்கள் இதற்கு தகுதிபெறமாட்டார்கள் என குறிப்பிடப்படுகிறது.

கடல்கடந்த தடுப்பு முகாம்களிலுள்ள 150 அகதிகளை வருடமொன்றுக்கு ஏற்றுக்கொள்ளத் தயார் என கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்து அரசு அறிவித்திருந்த நிலையில், இதுகுறித்த இறுதி ஒப்பந்தம் சுமார் 9 ஆண்டுகளின்பின் இருநாடுகளுக்கிடையில் எட்டப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் சலுகையை ஏற்றுக்கொண்டால் அது ஆட்கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் எனவும், ஆஸ்திரேலியா வருவதற்கான backdoor-பின்வாசலாக நியூசிலாந்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் எனவும் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு இதனை ஏற்றுக்கொள்வதற்கு இதுவரை காலமும் மறுத்துவந்தமை குறிப்பிடத்தக்கது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


2 min read

Published

Updated



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now