9 வருட தடுப்புமுகாம் வாழ்க்கை: விடுதலையாகி அமெரிக்கா செல்லும் ஆஸ்திரேலிய அகதிகள்!

ஆஸ்திரேலிய தடுப்புமுகாம்களில் சுமார் 9 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இரு அகதிகள் விடுதலைசெய்யப்பட்டு, அமெரிக்காவில் மீள்குடியர்த்தப்படுகின்றனர்.

Mehdi Ali & Adnan Choopani

Source: Facebook

ஈரான் பின்னணிகொண்ட மெஹ்டி அலியும், அவரது உடன்பிறவா சகோதரன் அட்னானும்  தமது 15வது வயதில் இந்தோனேசியா ஊடாக கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்திருந்தனர்.

கிறிஸ்மஸ்தீவிலிருந்து பல தடுப்புமுகாம்களுக்கு மாற்றப்பட்ட இவர்கள், பின்னர் நவுறுவிற்கு அனுப்பப்பட்டு, அங்கு பல ஆண்டுகளைக் கழித்தபின் மருத்துவதேவை கருதி ஆஸ்திரேலியாவுக்கு அழைந்துவரப்பட்டு, ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

2019ம் ஆண்டு ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட இவர்கள், பிரிஸ்பேனிலும் பின்னர் மெல்பன் Park ஹோட்டல் என சுமார் 2 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டிருந்தபோதிலும்,  படகில் வந்த காரணத்தால் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படாமல் ஹோட்டலில் தமது வாழ்க்கையைக் கழிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா-அமெரிக்கா இடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்கீழ், அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அகதிகளில் அலியும், அட்னானும் அடங்கியிருந்ததால், அவர்கள் அங்கு புறப்பட்டுச்சென்றுள்ளனர்.

இதுதொடர்பில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அலி, அமெரிக்காவில் தனது வாழ்க்கையைத் தொடங்குவதற்காக புறப்பட்டுச் செல்வதாகவும், தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுதலையாகும்போதே தனக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அலியும், அட்னானும் மெல்பனில் தடுத்துவைக்கப்பட்ட Park ஹோட்டலில், தடுப்பூசி விவகாரத்தில் நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த டென்னிஸ் நட்சத்திரம் நொவெக் ஜொக்கோவிச்சும் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னணியில், அங்கிருந்த அகதிகள் மீதும் ஊடக வெளிச்சம் பாய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


2 min read

Published

Updated



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now

9 வருட தடுப்புமுகாம் வாழ்க்கை: விடுதலையாகி அமெரிக்கா செல்லும் ஆஸ்திரேலிய அகதிகள்! | SBS Tamil