SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் mRNA தடுப்பூசிகளை தயாரிக்க முடிவு!

A vial filled with the Moderna COVID-19 vaccine
A vial filled with the Moderna COVID-19 vaccine Source: AAP

2 min read

Published


Skip to article content

கோவிட் பெருந்தொற்றினை தடுப்பதற்கும் பருவகால நோய் நிவாரணிகளுக்கு வழியமைக்கவும் ஆஸ்திரேலியாவிலேயே mRNA தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கு பிரதமர் Scott Morrison முடிவெடுத்துள்ளார். 

அங்கீகரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளை உலகெங்கும் விநியோகம் செய்துவரும் நிறுவனங்களில் ஒன்றான Moderna-வுடன் இணைந்து, விக்டோரியாவில் தடுப்பூசி தயாரிக்கும் திட்டத்தை தனது சுகாதார அமைச்சின் நிபுணர் குழுவுடன் இணைந்து Scott Morrison வடிவமைத்துள்ளார்.

விக்டோரியாவில் அமைக்கப்படவுள்ள இந்தத் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு முதல் வருடமொன்றுக்கு 100 மில்லியன் தடுப்பூசிகளைத் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசி தயாரிப்பானது கொள்ளை நோய்களிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய புதுவிதமான வைரஸ் சவால்களுக்கும் ஏற்புடையதாக அமையும் என்று Morrison நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விக்டோரிய அரசோடு இணைந்து செயற்படுத்தவுள்ள இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பானது, நாட்டின் பொருளாதாரத்துக்கும் அனுகூலங்களை ஏற்படுத்தவல்லது என்று பிரதமர் கூறியுள்ளார்.

அரசினாலும் சுகாதாரத் தரப்புக்களினாலும் கூட்டாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி தயாரிப்பு தீர்மானம் தற்போது ஒழுங்குபடுத்துதல் மற்றும் திட்ட முன்மொழிவுத் தரப்புக்களின் அங்கீகாரத்துக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now