Moderna தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளலாம்?

நம் நாட்டு மக்களை கொரோனா வைரஸ் COVID-19 தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மூன்றாவது தடுப்பூசி அறிமுகமாகிறது. Moderna தடுப்பூசி குறித்த சில முக்கிய விடயங்களை இந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறோம்.

TGA to consider Covid vaccines for children aged between 5 and 11

Source: Getty Images/FatCamera

மருந்துகளின் பாவனையைக் கட்டுப்படுத்தும் The Therapeutic Goods Administration (சுருக்கமாக TGA), Moderna தடுப்பூசியின் பாவனைக்குத் தற்காலிக ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஏற்கனவே நாட்டில் பயன்படுத்தப்படும் Pfizer மற்றும் AstraZeneca தடுப்பூசிகளுடன் அமெரிக்காவில் தயாராகும் Moderna தடுப்பூசி மக்களைப் பாதுகாப்பதில் ஒரு படி முன்னேறியுள்ளது.

Diagram show meaning of encapsulated mRNA vaccine from viral spike protein (developed from COVID-19 or SARS-CoV-2) and how its work for immune response
Diagram show meaning of encapsulated mRNA vaccine from viral spike protein (developed from COVID-19 or SARS-CoV-2) and how its work for immune response Source: iStockphoto

Pfizer தடுப்பூசி போலவே messenger RNA தடுப்பூசியும் உடலில் Covid-19 வைரஸிற்கெதிரான நோயெதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதற்குத் தேவையான புரதத்தை எவ்வாறு உருவாக்குவது என்று உயிரணுக்களுக்குக் கற்பிக்கிறது.  இதற்காக தடுப்பூசி 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை போடப்பட வேண்டும்.

தடுப்பூசி எப்போது மக்களுக்கு வழங்கப்படத் தொடங்கும்?

இப்போது ஆரம்ப நாட்கள் என்பதால் திட்டவட்டமாக கூறமுடியவில்லை, இருந்தாலும் இதுவரை எமக்குத் தெரிந்தவை இங்கே:

எத்தனை தடுப்பூசிகள் இங்கே வழங்கப்படும்?

இதுவரை மொத்தம் 25 மில்லியன் Moderna தடுப்பூசிகளை அரசு கொள்வனவு செய்துள்ளது.

10 மில்லியன் தடுப்பூசிகள் இந்த ஆண்டும், மீதி 15 மில்லியன் தடுப்பூசிகள் அடுத்த ஆண்டும் எமக்குக் கிடைக்கும், அடுத்த ஆண்டு கிடைக்கும் தடுப்பூசிகளில் திரிபடைந்த வைரஸுக்குத் தேவையான பூஸ்டர் (booster) தடுப்பூசிகளும் அடங்கும்.

தடுப்பூசி எப்போது நாட்டிற்கு வரும்?

முதல் மில்லியன் தடுப்பூசிகள் அடுத்த மாதம் வரவுள்ளது.  முதலில் இந்தத் தடுப்பூசிகள் மருந்தகங்களுக்கு ஒதுக்கப்படும்.

மேலும் மூன்று மில்லியன் தடுப்பூசிகள் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டோஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

COVIDக்கு எதிரான எங்கள் போரில், மற்றொரு முக்கியமான ஆயுதம்

என்று பிரதமர் Scott Morrison கூறியுள்ளார்.

“அடுத்த மாதம் முதல், இந்தத் தடுப்பூசியும் மக்களுக்கு வழங்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.

யாருக்கு வழங்கப்படும்?

Moderna தடுப்பூசிக்கு இன்னமும் TGA முழுமையான ஒப்புதல் வழங்கவில்லை என்பதால், இதற்கான தெளிவான பதில் இல்லை இருந்தாலும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசி வழங்கப்படலாம் என்று TGA தற்காலிக ஒப்புதல் வழங்கியுள்ளது.

12 முதல் 17 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு Moderna தடுப்பூசி வழங்குவது குறித்து, TGA மதிப்பாய்வு செய்கிறது.

Moderna தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட COVID -19 தடுப்பூசிகளும் சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன என்றும், தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சைக்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையையும் இறப்பையும் குறைக்கிறது என்றும் மருத்துவ ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.

“Moderna தடுப்பூசி COVID -19 தொற்றுக்கு எதிராக 93 சதவீத செயல்பாட்டுத் திறன் கொண்டது என்றும், 98 சதவீதம் கடுமையான நோய்களுக்கு எதிராகவும், 100 சதவீதம் மரணத்தைத் தடுக்கவும் செயல் படுகிறது” என்று TGA தலைமை நிர்வாக அதிகாரி John Skerritt கூறியுள்ளார்.

“ஆறு மாதங்களில் அந்தத் தடுப்பூசியின் தொடர்ச்சியான செயல்பாடு குறித்த தரவுகள் மிகவும் உற்சாகத்தைத் தருகிறது,” என்று அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறினார்.

வேறு எந்த நாடுகள் Moderna தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன?

இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, வங்காளதேசம், ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர் உட்பட மற்றும் பல நாடுகளில் இது ஏற்கனவே பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவில் மட்டும் 140 மில்லியனுக்கும் அதிகமான Moderna தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

With AAP.


Share

2 min read

Published

Updated

By SBS News, Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now