நேபாளத்தில் Pokhara பகுதியில் Yeti Airlines-இன் உள்நாட்டு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டனர், அதில் இருந்தவர்களில் ஒரு ஆஸ்திரேலியரும் பயணித்ததாக நம்பப்படுகிறது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 72 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்த மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் உடைந்த பகுதிகளைச் சுற்றி மீட்புப் பணியாளர்கள் தத்தளிப்பதை அந்நாட்டின் உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
விபத்து நடைபெற்ற வேளை வானிலை தெளிவாக இருந்தது என்றும் விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் A300 காத்மாண்டுவை நெருங்கும் போது மலைப்பகுதியில் மோதியதில் 167 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு நேபாளத்தின் மிக மோசமான விமான விபத்து இது என்று Aviation Safety Network தரவு தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் விமானம் அல்லது ஹெலிகாப்டர் விபத்துகளில் 2000 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 350 பேர் இறந்துள்ளனர் - உலகின் 14 உயரமான மலைகளில் எவரெஸ்ட் உட்பட எட்டு மலைகள் உள்ள நேபாளத்தில் ஏற்படும் திடீர் வானிலை மாற்றங்கள் அபாயகரமான நிலைமைகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

A regional passenger plane with 72 people on board crashed into a gorge while landing at a newly opened airport in the town of Pokhara. Source: AAP / Krishna Mani Baral/AP
விபத்துக்குள்ளான இந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணிக்கு Seti Gorge பள்ளத்தாக்கிலிருந்து பொக்ரா விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டதாக நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் விமானம் விபத்துக்கொள்ளகிவுள்ளது.
குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தை ஆராய அரசாங்கம் ஒரு குழுவை அமைந்துள்ளதாகவும் , 45 நாட்களுக்குள் அக்குழு அறிக்கை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நேபாள நிதியமைச்சர் Bishnu Paudel செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

A passenger plane with 72 people on board has crashed near Pokhara International Airport in Nepal. The plane was carrying 68 passengers and four crew members. Source: AAP / Bikram Rai/AP
பயணிகளில் ஐந்து இந்தியர்கள், நான்கு ரஷ்யர்கள் மற்றும் ஒரு ஐரிஷ், இரண்டு தென் கொரியர்கள், ஒரு ஆஸ்திரேலியர், ஒரு பிரெஞ்சு மற்றும் ஒரு அர்ஜென்டினா பிரஜை ஆகியோர் அடங்குவர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
I