Highlights
- ஈஸ்டர் தாக்குதல்களுடன் பேராசிரியர் லுக்மனுக்கு தொடர்புள்ளதாக இலங்கை அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குற்றச்சாட்டினை மறுத்துள்ள பேராசிரியர் லுக்மன், இலங்கை அரசு மீது அவதூறு வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- கட்டாரில் பேராசிரியர் லுக்மனும் அவரது மகனும் 6 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த 2019ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்புக்களில் சிக்கி சுமார் 250 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பில் இலங்கை அரசு தயாரித்துள்ள விசாரணை அறிக்கையில், ஈஸ்டர் தாக்குதல்களுடன் பேராசிரியர் லுக்மனுக்கு தொடர்புள்ளதாகவும், தீவிரவாதிகள் சிரியாவுக்குச் சென்று ஆயுதப்பயிற்சி எடுப்பதற்கான பயண ஒழுங்குகளில் பேராசிரியர் லுக்மன் உதவிபுரிந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டினை அடியோடு மறுத்துள்ள பேராசிரியர் லுக்மன் இலங்கை அரசு மீது அவதூறு வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் குறித்த விடயத்தில் ஐ.நா அமைப்பு உடனடியாகத் தலையிட்டு தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொள்ளுமாறு இலங்கை அரசை வலியுறுத்தவேண்டும் என கோரியுள்ளார்.
இதுஒருபுறமிருக்க பணிநிமித்தம் ஆஸ்திரேலியாவிலிருந்து கட்டாரில் குடியேறிய பேராசிரியர் லுக்மன் தலீப் மற்றும் 24 வயதான அவரது மகன் இஸ்மயில் தலீப் ஆகியோர் கட்டாரில், அடையாளம் தெரியாத இடமொன்றில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவுசெய்யப்படாத நிலையில் 6 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
சீருடை தரிக்காத உத்தியோகத்தர்கள் சிலராலேயே இவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக பேராசிரியரின் மகள் மரியம் SBS செய்திப்பிரிவிடம் தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசின் குற்றச்சாட்டின்பேரில் பேராசிரியரும் அவரது மகனும் கட்டாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என குறிப்பிடப்படுகிறது.
ஆஸ்திரேலிய குடியுரிமையுள்ள பேராசிரியர் லுக்மன் தற்போது துருக்கியில் வாழ்ந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
