மருந்தகங்களிலும், மருத்துவரிடமும் மட்டுமல்ல, மிருக வைத்தியர்களிடமும் கிடைக்கிறது Ivermectin என்ற மருந்து. இந்த மருந்தின் பாவனை அண்மைய நாட்களில் அதிகரித்திருப்பதை இவர்கள் அவதானித்திருக்கிறார்கள்.
கால்நடை விலங்குகள், குறிப்பாக குதிரைகள் மீது காணப்படும் ஒட்டுண்ணிகளுக்கு சிகிச்சையளிக்க Ivermectin பயன்படுத்தப்படுகிறது. பெரிய அளவில் உட்கொள்ளப்பட்டால் மனிதர்களுக்கு இந்த மருந்து ஆபத்தான விளைவுகளைத் தோற்றுவிக்கும்.
COVID-19 தொற்றுக்கு இந்த மருந்து பலன் தரும் என்று நம்பி, தொற்று ஏற்பட்டவர்கள் சிலர் இந்த மருந்தை உட்கொள்வதாக மருத்துவத் துறையில் பணியாற்றும் சிலர் பகிர்ந்துள்ளார்கள்.
நாட்டில் மருந்துகளைக் கண்காணிக்கும் அமைப்பான TGA, Covid வைரஸுக்கு சிகிச்சையளிக்க இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரு வாரங்களுக்கு முன், இந்த மருந்தை இணையத்தளம் ஒன்றிலிருந்து வாங்கிய ஒருவர் அதனை உட்கொண்டதால் ஏற்பட்ட பாரதூர விளைவுகளைத் தொடர்ந்து சிட்னியின் Westmead மருத்துவ மனைக்கு அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

மனித உடம்பு, விலங்குகளுக்குக் கொடுக்கப்படும் அளவு மருந்தை ஏற்றுக் கொள்ளாது என்றும் இந்த மருந்தை உட்கொண்ட சில விலங்குகளுக்கு வலிப்பு, நடுக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் இறப்பு என்பன நிகழ்ந்திருக்கின்றன என்பதால் அதே ஆபத்து மனிதருக்கும் நிகழலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, Covid-19 தொற்றுக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதே நல்ல வழி என்று மருத்துவ ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.

கொரோனாவைரஸ் உடலைத் தாக்க்கிய பின்னர் அதைத்தேடி அழிக்க மருந்துகள் ஒன்றும் தற்போது பாவனையில் இல்லை என்றாலும், அது குறித்த ஆராய்ச்சிகள் மிக மும்மரமாக நடந்து வருகின்றன.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
