ஆஸ்திரேலிய புள்ளிவிவரவியல் திணைக்களம் சமீபத்தில் வெளியிட்டுள்ள 2019/20 நிதியாண்டிற்கான தரவுகளின்படி, ஆஸ்திரேலியர் ஒருவரின் சராசரி வருமானம் $52,338 ஆக காணப்படுகிறது. இது முந்தைய ஆண்டை விட 1.8 சதவீதம் அதிகமாகும்.
ACT-ல் உள்ள ஆஸ்திரேலியர்கள் அதிக சராசரி வருமானத்தை($68,325) பெறுகின்றனர். டாஸ்மேனியர்கள் மிகக் குறைந்த சராசரி வருமானத்தை($47,909) பெறுகின்றனர்.
உள்ளூராட்சிப் பகுதிகளின் அடிப்படையில் பார்த்தால், மேற்கு ஆஸ்திரேலியா Ashburton பகுதியானது ஆஸ்திரேலியாவில் அதிக சராசரி வருமானம் ($99,367) பெறுகிறது. அதைத் தொடர்ந்து தெற்கு ஆஸ்திரேலியாவில் Roxby Downs ($98,955) காணப்படுகிறது.
நியூ சவுத் வேல்ஸில், Woollahra ($81,096), North Sydney ($80,266), Mosman ($78,073) மற்றும் Lane Cove ($74,773) ஆகியவை அதிக சராசரி வருமானம் கொண்ட உள்ளூராட்சிப் பகுதிகள் ஆகும்.
விக்டோரியாவில், Yarra அதிக வருமானம் ($69,025) பெறுபவர்களைக் கொண்ட பகுதியாக காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து Stonnington ($68,889), Port Phillip ($65,804) மற்றும் Bayside ($64,459) ஆகியன காணப்படுகின்றன.
இதேவேளை ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்தியத்திலும் ஆஸ்திரேலியர்களின் சராசரி வருமானம் எவ்வளவு என்பது கீழே தரப்பட்டுள்ளது.
- NSW - $52,849
- Victoria - $51,996
- Queensland - $51,197
- South Australia - $50,440
- Western Australia - $55,208
- Tasmania - $47,909
- Northern Territory - $62,010
- Australian Capital Territory - $68,325
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
