SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய அணித்தலைவர் மற்றும் துணைத்தலைவர் தொடர்ந்து விளையாட மாட்டார்கள் !

தென்னாபிரிக்காவுடன் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் ஆஸ்திரேலிய அணித்தலைவர் Steve Smith மற்றும் துணைத்தலைவர் David Warner தொடர்ந்து ஆடப் போவதில்லை என்று சற்று நேரத்திற்கு முன் அறிவித்துள்ளனர்.

Australian captain Steve Smith, left, and Dave Warner stand down after the ball tampering incident n South Africa.
Australian captain Steve Smith, left, and Dave Warner stand down after the ball tampering incident n South Africa. Source: AAP

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: AAP, SBS



Skip to article content

தென்னாபிரிக்காவின் Cape Townல் நடக்கும் Test Cricket போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி நடந்து கொண்ட விதம் கிரிக்கட் ஆர்வலர்கள் பலருக்கு ஆதங்கத்தையும் கோபத்தையும் உண்டாக்கியிருக்கிறது என்பது நீங்கள் அறிந்த செய்தி.  (இது குறித்த பின்னணி செய்திக்கு இங்கே அழுத்தவும்).

தென்னாபிரிக்காவுடன் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் ஆஸ்திரேலிய அணித்தலைவர் Steve Smith மற்றும் துணைத்தலைவர் David Warner தொடர்ந்து ஆடப் போவதில்லை என்று சற்று நேரத்திற்கு முன் அறிவித்துள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7:30 மணியளவில் ஆரம்பமாகிய ஆட்டம் Tim Paine தலமையில் நடக்கிறது.

இது குறித்த மேலதிக செய்திகள் எமக்குக் கிடைக்கும்போது, அவற்றை நாம் உங்களுக்கு எடுத்துவருவோம்.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now