ஸ்வீடன் மற்றும் டென்மார்க் நாடுகளில் Moderna தடுப்பூசியை இளையோருக்கு வழங்குவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக அறிந்த TGA, Moderna Covid-19 தடுப்பூசியின் அரிய பக்க விளைவுகளை உன்னிப்பாக கண்காணிப்பதாகக் கூறுகிறது.
Moderna தடுப்பூசி போட்டவர்களில், 1991ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பின்னர் பிறந்த இளைஞர்களிடையே மாரடைப்பு (myocarditis மற்றும் pericarditis) அதிகரிப்பதை ஸ்வீடன் நாட்டு சுகாதாரத் துறையின் தரவுகள் சுட்டிக்காட்டுகிறது.
இதயத்தில் வீக்கத்தைத் தோற்றுவிக்கிறது
டென்மார்க் நாட்டில் 12 முதல் 17 வயதுடையவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அங்கு, "முன்னெச்சரிக்கை நடவடிக்கை" என்று, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு Moderna தடுப்பூசி போடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
“Moderna தடுப்பூசி போடும்போது, இதய வீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக ஆரம்ப தரவுகள் காட்டுவதால், இது பரவலாக நடக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது” என்று டென்மார்க் நாட்டு சுகாதார ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தரவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும், அவை ஐரோப்பிய மருத்துவ ஆணையத்தின் (European Medicines Agency அல்லது சுருக்கமாக EMA) ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த அறிக்கை மேலும் சொல்கிறது.
நம் நாட்டில் Moderna தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த TGA ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்வீடன் மற்றும் டென்மார்க் முடிவுகள் பற்றி அறிந்திருப்பதாகவும், இந்த அரிய பக்க விளைவுகளை TGA தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும், சர்வதேச மருந்துக் கட்டுப்பாட்டாளர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது என்றும், நாட்டில் யாருக்காவது பாதிப்பு ஏற்படுகிறாதா என்பதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும், SBS செய்திப் பிரிவினருக்கு TGA பதிலளித்துள்ளது.
“Moderna Covid-19 தடுப்பூசிக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்புதலில் எந்த மாற்றமும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தில், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Moderna தடுப்பூசி வழங்கப்படலாம் என்ற EMA ஒப்புதலிலும் மாற்றமில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று அந்தப் பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Debate continues over vaccines for young children. Source: INA FASSBENDER/AFP via Getty Images
தடுப்பூசிக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்புதலில் எந்த மாற்றமும் இல்லை
நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து எண்பதாயிரம் Moderna தடுப்பூசிகள் போடப் பட்டிருந்தாலும், யாருக்கும் எந்தப் பக்க விளைவும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப் படவில்லை என்று TGA கூறியுள்ளது.
COVID-19 தடுப்பூசியால் ஏற்படும் அபாயங்களை விட, தொற்றினால் ஏற்படும் அபாயம் அதிகம் என்று TGA மேலும் கூறியுள்ளது.
With Reuters.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.