SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் எந்த தொழில் செய்வோர் அதிக ஊதியம் பெறுகின்றனர்?

நாடு முழுவதும் அதிக வருமானமீட்டுபவர்களில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் முதலிடத்தில் காணப்படுகின்றனர்.

superfund
Source: Getty Images

2 min read

Published

By Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் தொழில்களின் பட்டியலை ATO-வரித்திணைக்களம் வெளியிட்டுள்ளது.

2018-19 காலப்பகுதியில் வரித்திணைக்களத்திற்கு வரி செலுத்திய பல்வேறு  தொழில்துறை சார்ந்தவர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி நாடு முழுவதும் அதிக வருமானமீட்டுபவர்களில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் முதலிடத்தில் காணப்படுகின்றனர். இரண்டாமிடத்தில் மயக்கவியல் மருத்துவ நிபுணர்கள் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் தொழில்களில் முதல் பத்து இடங்களில் என்னென்ன தொழில்கள் இருக்கின்றன என்ற பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

  1. Surgeon - $394,303
  2. Anaesthetist - $386,065
  3. Internal Medicine Specialist - $304,752
  4. Financial Dealer - $275,984
  5. Psychiatrist - $235,558
  6. Other Medical Practitioners - $222,933
  7. Judicial or Legal Professionals - $188,798
  8. Mining Engineer - $184,507
  9. CEO or Managing Director - $164,896
  10. Engineering Manager - $159,940

ஆகக்கூடிய சம்பளம் பெறுபவர்களான சத்திரசிகிச்சை நிபுணர்கள் மொத்தமாக 4150 பேர் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ளனர். மயக்கவியல் மருத்துவ நிபுணர்கள் 3412 பேர் உள்ளனர்.

அதேநேரம் hospitality துறை பணியாளர்களும் தூய்மைப்படுத்தல் பணியாளர்களும்  ஆகக்குறைந்த வருமானமீட்டுபவர்களாக காணப்படுகின்றனர்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now