SKIP TO MAIN CONTENT

விநாயகர் தொடர்பான கேலிச்சித்திரம்: ஆஸ்திரேலிய ஊடகத்தை மன்னிப்புக்கோருமாறு வலியுறுத்தல்

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில் The Daily Telegraph-இல் மே மாதம் 4ம் திகதி வெளியான செய்திக்கட்டுரையிலேயே குறிப்பிட்ட கேலிச்சித்திரம் இடம்பெற்றுள்ளது.

Cartoon
Source: The Daily Telegraph

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

Highlights

  • ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்றில் வெளியான கேலிச்சித்திரம் தொடர்பில் மன்னிப்புக்கோர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • இந்துக் கடவுட்களில் ஒருவரான விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் கேலிச்சித்திரம் அமைந்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
  • இந்துக் கடவுட்களின் படங்களை தவறாக சித்தரித்து வெளியிடுவதற்கு எதிராக தெளிவான வரைமுறைகளை வகுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரபல நாளிதழான The Daily Telegraph-இல் வெளியான கேலிச்சித்திரமொன்று இந்துக் கடவுட்களில் ஒருவரான விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும் இதுதொடர்பில் குறித்த ஊடகம் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் நாட்டிலுள்ள இந்து அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில் The Daily Telegraph-இல் மே மாதம் 4ம் திகதி வெளியான செய்திக்கட்டுரையிலேயே குறிப்பிட்ட கேலிச்சித்திரம் இடம்பெற்றுள்ளது.

Cartoon
Source: Facebook/ Karthik Arasu

பல்கலாச்சார சமூகங்கள் வாழும் ஆஸ்திரேலியாவில் எந்தவொரு நம்பிக்கையையும் மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் ஆஸ்திரேலியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் இந்துக்களின் நம்பிக்கையை The Daily Telegraph முற்றிலும் அவமதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Cartoon
Source: Facebook/Vishwa Hindu Parishad of Australia Inc- SA Chapter

எதையாவது சித்தரிக்க பல வழிகள் இருக்கும்போது ஒருசாராரின் மத நம்பிக்கையை ஏன் அவமதிக்க வேண்டும் எனவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த கட்டுரையை வெளியிட்டதற்காக The Daily Telegraph மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் இந்துக்களின் நம்பிக்கைகள் தொடர்பில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தமது ஊழியர்களுக்கு அறிவூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தி Gaurav Chauhan என்பவர் சார்பில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்துக் கடவுட்களின் படங்களை தவறாக சித்தரித்து வெளியிடுவதற்கு எதிராக Australian Press Council தெளிவான வரைமுறைகளை வகுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயணத்தடையை மீறி இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிப்பது என்ற அறிவிப்பு, கோவிட் பேரவலத்துக்குள் சிக்கியுள்ள இந்தியாவை நரகம் என வர்ணிப்பது, இந்தியா குறித்த செய்தியில் இந்துக் கடவுளை இழிவுபடுத்தும்வகையில் கேலிச்சித்திரங்களை வெளியிடுவது என்ற வரிசையில் இன்னும் என்னென்னவற்றின் மூலம் இந்தியர்களையும் இந்துக்களையும் ஆஸ்திரேலிய அரசும் ஊடகங்களும் புண்படுத்தப்போகின்றன என இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now