சிட்னியில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் மரணம்!

MD Moshin

Bangladeshi Asylum seeker Mohamed Mohsin Source: Justice for refugees-Facebook

சிட்னியின் தென்மேற்கில் உள்ள Lakemba பகுதியிலுள்ள பள்ளிவாசலில் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷ் பின்னணி கொண்ட 33 வயதான மொகமட் மோஷின் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக Refugee Action Coalition அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

2013ம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா வந்த குறித்த நபரது அகதி தஞ்சக்கோரிக்கை 3 தடவைகள் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவும் இதனால் அவர் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த சில மாதங்களாகவே அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

வேலை செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்த மொகமட் மோஷின், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடனேயே வாழ்க்கை நடத்திவந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

பிரிஸ்பேனில் முன்னாள் மனுஸ் அகதியும் மருத்துவருமான Sayed Mirwais Rohani தற்கொலை செய்துகொண்ட ஒருசில நாட்களுக்குள் மற்றுமொரு புகலிடக்கோரிக்கையாளர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Readers seeking support can contact Lifeline crisis support on 13 11 14, Suicide Call Back Service on 1300 659 467 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged 5 to 25). More information is available at Beyond Blue.org.au and lifeline.org.au.

 


1 min read

Published

Updated



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now