Centrelink கொடுப்பனவு தொகை அதிகரிப்பு: யாரெல்லாம் பெறமுடியும்?

அரச கொடுப்பனவு பெறும் இளைஞர்களுக்கான உதவித்தொகை புதிய ஆண்டு முதல் அதிகரிக்கப்படுகிறது.

Australian money

Source: Getty

ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட மீளாய்வின் பின்னரான கொடுப்பனவு அதிகரிப்பின் ஊடாக, நாடு முழுவதுமுள்ள சுமார் 1 மில்லியன் இளம் ஆஸ்திரேலியர்கள் பயனடையவுள்ளனர்.

நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துவரும் பின்னணியில், இதனைச் சமாளிப்பதற்கு உதவும்வகையில் இளம் ஆஸ்திரேலியர்களுக்கான கொடுப்பனவு 6 வீதத்தால் உயர்த்தப்படுவதாக லேபர் அரசு தெரிவித்துள்ளது.

இக்கொடுப்பனவு அதிகரிப்பு ஜனவரி 1ம்திகதி முதல் நடைமுறைக்குவரும் என குறிப்பிடப்படுகிறது.

இதன்படி எந்தெந்தப் பிரிவுகளில் உள்ளோர் எத்தனை டொலர்களை அதிகமாகப் பெறவுள்ளனர் என்ற விவரம் கீழே தரப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்படுவது இருவாரங்களுக்கான கொடுப்பனவுத்தொகையாகும்.

YOUTH ALLOWANCE (living at home)
19.10 டொலர்களால் அதிகரிக்கப்படுகிறது (இருவாரங்களுக்கான மொத்த தொகை $332.90)

YOUTH ALLOWANCE (living away from home)
32.40 டொலர்களால் அதிகரிக்கப்படுகிறது (இருவாரங்களுக்கான மொத்த தொகை $562.80)

YOUTH ALLOWANCE (single with children)
41.40 டொலர்களால் அதிகரிக்கப்படுகிறது (இருவாரங்களுக்கான மொத்த தொகை $720.40)

AUSTUDY (single with no children)
32.40 டொலர்களால் அதிகரிக்கப்படுகிறது (இருவாரங்களுக்கான மொத்த தொகை $530.40)

AUSTUDY (single with children)
41.40 டொலர்களால் அதிகரிக்கப்படுகிறது (இருவாரங்களுக்கான மொத்த தொகை $720.40)

ABSTUDY
Aboriginal and Torres Strait Islander மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான ABSTUDY கொடுப்பனவு 22.40 டொலர்களால் அதிகரிக்கப்படுகிறது (இருவாரங்களுக்கான மொத்த தொகை $389.40)

CARERS ALLOWANCE
8.30 டொலர்களால் அதிகரிக்கப்படுகிறது (இருவாரங்களுக்கான மொத்த தொகை $144.80)
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand