NSW தேர்தலில் Labor கட்சி வெற்றி! தமிழர் ஒருவர் வெற்றி பெறும் வாய்ப்பு!

நேற்று நடந்த NSW மாநில தேர்தலைத் தொடர்ந்து, டாஸ்மேனிய மாநிலம் தவிர்த்த ஏனைய அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் Labor கட்சியின் ஆட்சி.

A man and a woman celebrating

Labor leader and Premier-elect Chris Minns, čelnik Laburističke stranke i novoizabrani premijer Novog Južnog Walesa sa suprugom Annom na proslavi izbornih rezultata Source: AAP / Dean Lewins

முக்கிய விடயங்கள்
  • நேற்று, சனிக்கிழமை இரவு 9 மணியளவில் மாநில Labor கட்சித் தலைவர் Chris Minns அவர்களை premier Dominic Perrottet தொலைபேசியில் அழைத்து தோல்வியை ஒப்புக்கொண்டார்.
  • ஆட்சியமைக்கத் தேவையான 47 இடங்களைப் பெற்று விடும் என்பதால், மற்றவர்கள் எவரினதும் ஆதரவின்றி, Labor கட்சி தனியாக ஆட்சி அமைக்க முடியும்.
  • NSW வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வசிக்கும் சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள முக்கியமான இடங்களில் இரு தலைவர்களும் கடுமையாகப் பிரச்சாரம் செய்துள்ளனர்.
  • Liberal கட்சி தற்போது டாஸ்மேனிய மாநிலத்தில் மட்டும் ஆட்சி நடத்துகிறது. அது தவிர்த்த ஏனைய அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் Labor கட்சி ஆட்சி நடத்தும்.
நேற்று, சனிக்கிழமை இரவு, வாக்குகள் கணக்கிடப்பட்டு ஓரளவு தெளிவாக முடிவுகள் தெரிய ஆரம்பித்ததும் NSW மாநிலத்தின் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு Labor கட்சி ஆட்சியமைக்கும் என்பதும் Premier ஆக Chris Minns பொறுப்பேற்பார் என்பதும் தெளிவாகத் தொடங்கியது.

தனது கட்சி “மீண்டும் ஆட்சியமைக்க தயாராக உள்ளது” என்று Premier ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Chris Minns உரையாற்றுகையில் அறிவித்தார்.

“இந்த மாநில மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

“NSW மாநிலத்திலுள்ள அனைவருக்குமான ஒரு ஆட்சியை நாங்கள் நடத்துவோம். நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மிகப் பெரியவை என்பதை நாங்கள் அறிவோம், பாரிய பொறுப்புகளை நாம் கையேற்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் NSW மாநில Labor கட்சி, மீண்டும் இந்த சிறந்த மாநிலத்தில் ஆட்சி செய்யத் தயாராக உள்ளது.”

தேர்தலில் பதவி இழந்த Liberal கட்சி premier Dominic Perrottet அவர்களின் சேவைக்கு Chris Minns நன்றி தெரிவித்தார்.

“எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன் உதாரணமாக, ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நாகரிகமான முறையில் இந்த தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எந்த கட்சியும் மற்றவரை இழிவாகப் பேசவில்லை. எந்தக் கட்சியும் முறைகேடாக மற்றவரை நடத்தவில்லை,” என்று அவர் கூறினார்.
சிட்னி நகர் முழுவதும் தேர்தல் நாளன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் Anthony Albanese, நேற்றிரவு சிட்னியில் நடந்த Labor கட்சி விழாவில் Chris Minns அவர்களை மேடைக்கு வரவேற்றார்.

“Labor கட்சியின் நற்குணங்கள் அனைத்தையும் இவர் பிரதிபலிக்கிறார்” என்று கூறி, பிரதமர் அவரை வரவேற்றார்.

“மக்களின் நலன் மட்டுமே அவரது இதயத்தில் குடி கொண்டிருக்கும்.”

அவரது திறமையான வழிகாட்டுதல் மட்டுமின்றி, நேர்மை, தூர நோக்கு, இரக்கம் மற்றும் நேர்மை ஆகியவற்றைப் பிரதமர் புகழ்ந்து பேசினார்.

பிரதமர் Anthony Albanese அவர்கள் Chris Minns அவர்களுடன் பல இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை இந்தத் தேர்தல் பிரச்சார காலத்தில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் அதே அளவிற்கு, எதிர்க்கட்சித் தலைவர் Peter Dutton, Liberal கட்சி பிரச்சாரக் கூட்டங்களில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்க வேறுபாடாக இருந்தது.

“Chris Minns ஒரு சிறந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து நடத்தினார்” என்று Labor கட்சி மூத்த உறுப்பினரும், அமைச்சருமான Chris Bowen இந்த விழாவில் பேசும்போது கூறினார்.

“NSW மாநிலத்தின் மிகச் சிறந்த Labor premierகளாகக் கடமையாற்றிய Neville Wran மற்றும் Bob Carr போன்றவர்களுக்கு இணையான ஒரு premier ஆக Chris Minns திகழ முடியும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தோல்வியை ஒப்புக் கொண்டார் premier Dominic Perrottet

Premier Dominic Perrottet நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் Chris Minns அவர்களைத் தொலைபேசியில் அழைத்து, இந்தத் தேர்தலில் தனது கட்சி தோல்வியடைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டார்.

நாட்டின் நலனுக்காக, NSW மாநிலத்திலுள்ள அனைவரும் புதிய premier Chris Minnsஐ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“உங்கள் அரசியல் கண்ணோட்டம் எதுவாக இருந்தாலும், NSW மாநிலத்திலுள்ள அனைவரும் Chris Minns அவர்களது வழிகாட்டுதலைத் தொடருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், NSW மாநிலம் வளரும் போது, நம் நாடும் செழிப்படையும், அந்த ஒரே காரணத்திற்காக நாம் அனைவரும் ஒன்றுபட முடியும் என்று நான் நம்புகிறேன்.”

Chris Minns ஒரு சிறந்த premierஆக இருப்பார் என்று Dominic Perrottet நம்பிக்கை தெரிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கு மத்தியில் Gladys Berejiklian பதவி விலகிய பின்னர், Dominic Perrottet premier பதவியேற்றார். 18 மாதங்கள் அந்தப் பொறுப்பிலிருந்த அவர், Liberal/National கூட்டணி நான்காவது முறையாக மாநிலத்தில் ஆட்சியமைக்கக் கோரி தேர்தலில் போட்டியிட்டார்.

தனது கட்சியின் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாக Dominic Perrottet கூறினார்.

மேலும், இதன் விளைவாகத் தான் நாடாளுமன்ற Liberal கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

“நாங்கள் மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டும் என்பது மிகவும் தெளிவாக உள்ளது.”

ஆன்மாவைத் தேடும் Liberal கட்சி

Labor கட்சியின் கனவு நனவாகி இருக்கும் அதே வேளையில், தனது இழப்பு பற்றிய பகுப்பாய்வை Liberal கட்சி தொடங்கியுள்ளது.

Liberal கட்சியின் தேர்தல் விழாவிற்குச் சென்றிருந்த முன்னாள் பிரதமர் John Howard, தேர்தல் முடிவைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கத் தயங்கினார். “அதைப் பற்றி பேசுவதற்கு இது தருணமல்ல" என்று அவர் கூறினார்.

Gladys Berejiklian திடீரென வெளியேறிய பின்னணியில் ‘ஒரு நம்ப முடியாத, கடினமான சூழ்நிலையில்’ Dominic Perrottet premier பொறுப்பேற்றார் என்று அவர் கூறினார்.

“நான் அவரை மிகவும் பாராட்டுகிறேன்” என்று பதவி விலகும் premier Dominic Perrottet குறித்து முன்னாள் பிரதமர் John Howard கூறினார்.

அதன் பின்னர்தான், மாநில கட்சித் தலைவர் பதவியிலிருந்து Dominic Perrottet விலகப் போகிறார் என்ற செய்தியை அவர் கேள்விப்பட்டார்.
நகரங்களுக்கு வெளியே (தொலைதூர இடங்களில்) வாழும் வாக்காளர்களின் வாக்குகள் Liberal கட்சிக்குக் கிடைக்காமல் போனதற்கு, பருவநிலை மாற்றம் குறித்த கொள்கைகள் மற்றும் நகரங்களில் வாழ்பவர்களுக்காக முன் வைக்கப்பட்ட முற்போக்கான தாராள வாதக் கொள்கைகள் தான் காரணமா என்று அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் மற்றும் கருவூல செய்தித் தொடர்பாளர் Angus Taylor அவர்களிடம் Sky News ஊடகம் கேட்ட போது, “உங்கள் பலம் இருக்கும் இடத்தில் நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
NSW STATE ELECTION
NSW Premier Dominic Perrottet with his wife Helen Perrottet and daughter Celeste arrive to cast their votes on NSW state election day. Source: AAP / AAP
கடும் போட்டியை எதிர் கொண்ட தொகுதிகளில் இரண்டு கட்சியின் தலைவர்களும் கடுமையாக பிரச்சாரம் செய்தார்கள். NSW மாநில வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வசிக்கும் சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள முக்கியமான இடங்களில் இவர்கள் பலத்த பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சிட்னி புறநகர் Beecroft என்ற இடத்தில், தின்பண்டங்கள் விற்றுக் கொண்டிருந்த பாடசாலை தன்னார்வலர்களைக் கடந்து சென்று, தனது மனைவி Helen மற்றும் மகள் Celeste ஆகியோருடன் premier Dominic Perrottet வாக்களித்தார்.

மிகக் கடுமையான போட்டியை எதிர்கொண்ட சிட்னியின் தெற்குப் பகுதியிலுள்ள Kogarah தொகுதியில், அவரது மனைவி Anna மற்றும் அவரது மூன்று மகன்மாருடன்

Chris Minns வாக்களித்தார். தனது கட்சி வெற்றி பெற்றால், மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பல திட்டங்களை செயலாற்றப் போவதாக உறுதியளித்தார்.

“NSW மாநிலத்தில் ஒரு புதிய தொடக்கத்திற்காக வாக்களியுங்கள், அத்தியாவசிய சேவைகள், எங்கள் பள்ளிகள் மற்றும் எங்கள் மருத்துவமனைகளுக்கான சிறப்புத் திட்டங்களை நடைமுறைப் படுத்த முனைந்திருக்கும் எமது குழு, தனியார் மயமாக்கலுக்கு எதிராகப் போராடப் போகிறது; அத்துடன், NSW மாநில மக்களுக்கு முதலிடம் கொடுக்கப் போகிறது,” என்று அவர் கூறினார்.
NSW STATE ELECTION
NSW பிரீமியர் டோமினிக் Perrottet (இதுவரை விட்டு) மற்றும் அவரது மனைவி ஹெலன் Perrottet (இரண்டாவது இடது) NSW மாநில தேர்தல் நாளில் வாக்களிக்கும், எப்பிங் இருக்கை, சிட்னியில், சனிக்கிழமை, மார்ச் 25, 2023. Source: AAP / AAP
Liberal/National கூட்டணி தலைமையிலான ஆட்சியின் போது, COVID-19 கட்டுப்பாடுகள் தனது சமூகத்தில் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் அதன் பின் விளைவுகள் இப்பொழுதும் எதிரொலிக்கின்றன என்றும் ஃபெடரல் நாடாளுமன்ற Fowler தொகுதி உறுப்பினர் Dai Li கூறினார்.

“நாங்கள் எப்படி இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப் பட்டோம் என்பதைப் பற்றி நாங்கள் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறோம். எங்கள் சமூகத்தில் அதன் தாக்கம் இன்றும் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனால், நாங்கள் உண்மையில் அரசினால் புறக்கணிக்கப் பட்டோம் என்ற உணர்வு இருக்கிறது,” என்று அவர் ABC தொலைக்காட்சி நேர்காணலில் கூறினார்.

தமிழ் வேட்பாளர்கள்

அஷ்வினி அம்பிகைபாகர், சுஜன் செல்வேந்திரன், தபீதா பொன்னம்பலம்
அஷ்வினி அம்பிகைபாகர், சுஜன் செல்வேந்திரன், தபீதா பொன்னம்பலம்
இந்த முறை NSW மாநில தேர்தலில் மூன்று தமிழர்கள் போட்டியிட்டார்கள். Greens கட்சி சார்பாக Prospect தொகுதியில் போட்டியிட்ட சுஜன் செல்வேந்திரன் (8.2% வாக்குகளை) 1,810 வாக்குகளைப் பெற்றுள்ளார். சுயேட்சை வேட்பாளராக தபீதா பொன்னம்பலம் Riverstone தொகுதியில் போட்டியிட்டு (2.7% வாக்குகளை) 852 வாக்குகளைப் பெற்றுள்ளார். Prospect மற்றும் Riverstone இரண்டு தொகுதிகளிலும் Labor கட்சி வெற்றி பெற்றுள்ளதாகத் தற்போதைய முடிவுகள் கூறுகின்றன.

Labor கட்சி சார்பாக Oatley தொகுதியில், அஷ்வினி அம்பிகைபாகர் போட்டியிட்டார். கடந்த தேர்தலில் Liberal கட்சி 6.8% வாக்கு வித்தியாசத்தில் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது. இந்தத் தேர்தலில் இதுவரை சுமார் 62 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், விருப்பு வாக்குகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டால், Labor மற்றும் Liberal, இரு கட்சிகளுக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் 0.8% மட்டுமே. வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவதற்கு நாம் ஏப்ரல் மாதம் இருபதாம் தேதி வரை காத்திருக்க வேண்டி இருக்கலாம். முடிவில், அஷ்வினி அம்பிகைபாகர் வெற்றி பெற்றால், NSW மாநிலத்தின் கீழ் சபை என்று பொதுவாக அழைக்கப்படும் Legislative Assembly என்ற சட்டமன்றத்தில் தேர்வான முதல் தமிழர் என்ற பெருமை அவரைச் சேரும்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

By Kulasegaram Sanchayan
Source: AAP

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
NSW தேர்தலில் Labor கட்சி வெற்றி! தமிழர் ஒருவர் வெற்றி பெறும் வாய்ப்பு! | SBS Tamil