தொழிற்துறை மற்றும் அறிவியல் துறை அமைச்சராகக் கடமையாற்றிய Christian Porterருக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் பிரதமர் Scott Morrison கூறவில்லை. அதே வேளை, இது குறித்து விரிவாக ஆராயும்படி பிரதமர் பணிமனை தலைவர் Phil Gaetjens அவர்களைக் கேட்டுள்ளார்.
நிதி வழங்கியவர் யார் என்று Christian Porter அடையாளப் படுத்த தவறியதால், தனிப்பட்ட ஆதாயம் தேடி நிதி வழங்கப்பட்டதா (Conflicts of interest) என்ற சந்தேகம் இருப்பதால் அவர் பதவி விலக முடிவெடுத்ததாக பிரதமர் மேலும் கூறினார்.
அமைச்சரவையின் தரத்தை நிலை நிறுத்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கை
என்பதால், அவரது பதவி விலகல் கோரிக்கையை நான் ஏற்றுக் கொண்டேன் என்று பிரதமர் Scott Morrison கூறினார்.
Christian Porterரின் அமைச்சரவை பொறுப்புகளை, எரிசக்தி அமைச்சர் Angus Taylor தற்காலிகமாக பொறுப்பேற்கிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
