SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் அகதிகளை குடியமர்த்துவதற்கான புதிய திட்டம்!

ஆஸ்திரேலியாவில் அகதிகளை குடியமர்த்தும்வகையில், பல்சமூகங்களை உள்ளடக்கிய Community Sponsorship செயற்றிட்டமொன்றை, பரீட்சார்த்த அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா இணக்கம் தெரிவித்துள்ளது.

NSW 491 visa January 2022 ROI submission window is open now
Australian visa in passport Source: SBS

2 min read

Published


Skip to article content

CRISP என அழைக்கப்படும் Community Refugee Integration and Settlement Pilot என்ற இத்திட்டம் குறித்த அறிவிப்பை குடிவரவுத்துறை அமைச்சர் Alex Hawke நேற்று வெளியிட்டார்.

கனடாவில் நடைமுறையிலிருப்பதைப் போன்ற இச்செயற்றிட்டத்தை, ஆஸ்திரேலியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் கடந்த பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டுவந்த பின்னணியில், ஆஸ்திரேலிய அரசு இதனை ஏற்றுக்கொண்டுள்ளது.

Refugee Council of Australia உட்பட பல அமைப்புக்களின் பங்களிப்பைக் கொண்ட CRISP திட்டத்தில், ஆஸ்திரேலிய அரசும் இணைந்துகொண்டு தனது பங்களிப்பை வழங்கவுள்ளதாக அமைச்சர் Alex Hawke தெரிவித்தார்.

பரீட்சார்த்த அடிப்படையில், அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படும் அதேநேரம், இத்திட்டத்தின் இறுதி வடிவம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள தகவல்களின்படி CRISP திட்டமூடாக சமூக அமைப்புகள், சமய அமைப்புகள், மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 1500 அகதிகளை அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தமுடியும்.

ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR-ஆல் ஆஸ்திரேலியாவிடம் பரிந்துரைக்கப்படுபவர்கள் அல்லது ஆஸ்திரேலியாவுடன் எவ்வித தொடர்புகளும் இல்லாதவர்கள், இத்திட்டம் ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படலாம்.

CRISP திட்டம் ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுபவர்களுக்கு Medicare வசதி வழங்கப்படும் அதேநேரம் வருமான உதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் மனிதாபிமான அடிப்படையில்  உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கைக்குள்ளேயே CRISP திட்டத்தினூடாக உள்வாங்கப்படுபவர்களும் அடங்கவுள்ளனர்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now