மெல்பனில் தமிழ் பெண்ணை 'அடிமை'யாக வைத்திருந்த வழக்கு: பிந்திய தகவல்கள்!

தமிழ்ப்பெண் ஒருவரை வீட்டுவேலையாள் என்ற பெயரில் எட்டு வருடங்கள் அடிமையாக வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் மெல்பனைச் சேர்ந்த தமிழ் தம்பதியர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், இவர்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது.

Victorian Supreme Court

Supreme Court of Victoria Source: Getty Images AsiaPac

சுமார் பத்து வாரங்களாக விக்டோரிய உச்ச நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் தனது முடிவைத் தெரிவித்த நீதிபதிகள் குழு, குறித்த தம்பதியரை குற்றவாளிகள் என அறிவித்திருந்தது.

இதையடுத்து இவர்களது தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னதான விசாரணைகள் நேற்று ஆரம்பமாகின.

இதன்போது கருத்துவெளியிட்ட நீதிபதி John Champion, குறித்த பெண்ணை 8 ஆண்டுகள் அடிமையாக வைத்திருந்தமை தொடர்பில் தம்பதியர் இருவரும் ஒருபோதும் வருத்தம் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல் குறித்த பெண்ணை இத்தம்பதியர் உரியமுறையில் கவனிக்காமல் விட்டுவிட்டதாகவும், மரணத்திற்கு அருகில் அந்தப் பெண் சென்றிருப்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் எனவும், ஆனால் இதுதொடர்பில் அவர்கள் மன்னிப்புக்கோரவில்லை எனவும் நீதிபதி John Champion தெரிவித்தார்.

ஆனால் அவர்கள் வருத்தம் தெரிவித்தால் அது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக அர்த்தப்படக்கூடும் எனவும், இது மேன்முறையீடுகளைப் பாதிக்கும் என்பதாலும், இவ்விடயம் தொடர்பில் அவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்க தயங்குவதாக இத்தம்பதியர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் குறித்த தம்பதியர் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றவர்கள் எனவும், தன்னார்வ பணிகள் ஊடாக சமூகத்திற்கு இவர்கள் பல சேவைகளை ஆற்றியுள்ளதாகவும் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதுஒருபுறமிருக்க கணவன்-மனைவி இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், கணவனுக்கு இலேசான autism மற்றும் பாரியளவில் depressive disorder இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டால் அவரது மனநலம் மேலும் மோசமடையும் என்றும், அவருக்கு ரத்துசெய்யப்பட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இதன்மூலம் விசேட தேவைகளைக் கொண்ட தனது மூன்று குழந்தைகளையும் அவர் பராமரிக்க முடியும் என்றும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றில் வாதிட்டார்.

இதேவேளை மனைவிக்கு வழங்கப்பட்ட பிணை ரத்துசெய்யப்பட்டுள்ள அதேநேரம் குழந்தைகளை பராமரிப்பதற்காக கணவன்  மட்டும் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கான தண்டனை எதிர்வரும் ஜுலை 21ம் திகதி விதிக்கப்படவுள்ளது.

இவ்வழக்கின் பின்னணி

மெல்பனைச் சேர்ந்த தமிழ் தம்பதியரின் வீட்டில் 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பணிபுரிந்த தமிழ்ப்பெண், ஒவ்வொரு நாளும் எந்த நேரமும் வேலைசெய்ய தயாரான நிலையில் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதாகவும், அதிகரித்த வேலைப்பளு காரணமாக இரவில் ஒரு மணிநேரம் மாத்திரமே நன்றாக உறங்கக்கூடிய சூழலில் அவர் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சிறுவர் பராமரிப்பு, துப்பரவுப் பணி, சமையல், துணி துவைத்தல் போன்ற அனைத்துப் பணிகளுக்குமான ஊதியமாக நாளொன்றுக்கு 3.39 டொலர்கள் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், வீட்டுக் கதவைத் திறப்பதென்றால்கூட தம்பதியரின் அனுமதிபெற்றுத்தான் திறக்கமுடியும் எனவும், குறித்த பெண் சார்பில் வாதாடிய Richard Maidment தெரிவித்தார்.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இப்பெண் கல்வியறிவு அற்றவர் எனவும், 14 வயதில் திருமணம் செய்து 29 வயதில் பாட்டியாகிவிட்டதாகவும், தனது குடும்பத்திற்கு பண உதவி செய்வதற்காகவே குறித்த தம்பதியருடன் ஆஸ்திரேலியா வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு தடவைகள் ஆஸ்திரேலியா வந்து தங்கியிருந்துவிட்டு திரும்பிய இப்பெண் 2007ம் ஆண்டு இங்கு வந்ததன்பின்னர் வீடுதிரும்ப அனுமதிக்கப்படவில்லை எனவும் அவரது சுற்றுலா விசா எப்போதோ முடிவடைந்துவிட்டபோதிலும் இப்பெண்ணை குறித்த தம்பதியர் தமது வீட்டில் தொடர்ந்தும் அடிமைபோல வைத்திருந்தார்கள் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதம் குறித்த பெண்ணுக்கு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மெல்பன் தம்பதியர்மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சிறுவர் பராமரிப்பு மற்றும் வீட்டுவேலை செய்வதற்கு பணச்செலவின்றி ஒருவரை தங்கவைத்துக்கொண்டு தமது வசதியான வாழ்க்கையைத் தொடர்வதே இத்தம்பதியரின் நோக்கம் என குறித்த பெண் சார்பில் முன்னிலையான வழக்குரைஞர் Richard Maidment தெரிவித்தார்.

ஆனால் குறித்த பெண்ணை அடிமையாக வைத்திருக்கவில்லை என்றும் முழுவிருப்பத்துடனேயே அவர் தம்முடன் தங்கியிருந்ததாகவும், இவை அனைத்தும் தமக்கு எதிராக புனையப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுகளே என்றும் மெல்பன் தம்பதியினர் தொடர்ச்சியாக தெரிவித்துவருகின்றனர்.

வீட்டு வேலைகளில் உதவிபுரிந்துவந்த அவர் ஒருபோதும் அடிமையாக நடத்தப்படவில்லை எனவும் 'அடிமை' என்ற சொற்பதம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனவும், இதற்கேற்றாற்போல் சம்பவங்களும் மிகைப்படுத்தப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதாக அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
மெல்பனில் தமிழ் பெண்ணை 'அடிமை'யாக வைத்திருந்த வழக்கு: பிந்திய தகவல்கள்! | SBS Tamil