Highlights
- செய்தி மற்றும் தகவல்களை 63 மொழிகளில் பெற்றுக்கொள்ள:sbs.com.au/coronavirus
- ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களுக்கு: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
- கோவிட் தடுப்பூசி குறித்த தகவல்களை உங்கள் மொழியில் பெற்றிட: COVID-19 vaccine in your language.
புதிதாக தொற்றுக்கண்டவர்கள் அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் இவர்களில் 18 பேர் நோய்த்தொற்றுடன் ஆகக்குறைந்தது ஒன்றரை நாட்கள் சமூகத்தில் நடமாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து கோவிட் தொற்றுடன் மெல்பன் வந்த removalists ஊடாகவும் சிட்னியிலிருந்து மெல்பன் திரும்பிய குடும்பம் ஒன்றினூடாகவும் ஆரம்பித்த கோவிட் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் 5 நாட்களுக்கு விக்டோரியாவில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்கீழ் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு, மருத்துவ பராமரிப்பு பெற மற்றும் பராமரிப்பு வழங்க, உடற்பயிற்சி(வீடுகளிலிருந்து 5 கிலோமீட்டருக்குள்) மற்றும் வேலை(அனுமதி வழங்கப்பட்டவர்கள் மட்டும்) ஆகிய ஐந்து காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.
இதுவரை தொற்றாளர்கள் சென்றுவந்த 165 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.coronavirus.vic.gov.au/exposure-sites என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.
அதேநேரம் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சுமார் 10,000 பேர் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 47,606 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநில கோவிட் நிலைமை தொடர்பான பிந்திய தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை பார்வையிடுங்கள்:
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் கோவிட் சோதனையை எங்கே மேற்கொள்ளலாம் என்ற விவரங்களை கீழுள்ள இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் கோவிட் பேரிடர்கால கொடுப்பனவு எவ்வாறு உள்ளது என்பதை கீழுள்ள இணைப்புக்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.
NSW Travel & transport and Quarantine
VIC Travel permit, Overseas travellers and Quarantine
ACT Transport and Quarantine
NT Travel and Quarantine
QLD Travel and Quarantine
SA Travel and Quarantine
TAS Travel and Quarantine
WA Travel and Quarantine
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும். இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப்போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
