NSW மாநிலத்தில் மேலும் 111 பேருக்கு தொற்று, ஒருவர் பலி! புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 111 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

Empty city street and shops, coronavirus pandemic, Sydney, Australia

Sydney şehir merkezindeki boş sokaklar. Source: Moment RF

Highlights

  • நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 111 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • சிட்னியின் சில பகுதிகளுக்கான கட்டுப்பாடு மேலும் இறுக்கமாக்கப்படுகிறது.
  • மிக ஆபத்தான திரிபடைந்த Delta வகை கொரோனா வைரஸ் தொற்று மாநிலத்தில் பரவிவருகின்றது.

சிட்னியின் தென்கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 80 வயதுகளிலுள்ள முதியவர் ஒருவரே மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 111 பேரில் 59 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 52 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார்.

இவர்களில் ஆகக்குறைந்தது 29 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருவதையடுத்து சிட்னியின் சில பகுதிகளுக்கான கட்டுப்பாடு மேலும் இறுக்கமாக்கப்படுகிறது.

இதன்படி இன்று நள்ளிரவுமுதல் Fairfield, Canterbury-Bankstown  மற்றும்  Liverpool  ஆகிய உள்ளூராட்சி பகுதிகளில் வாழும் சுகாதாரத்துறை மற்றும் அவசர சேவைகள் பிரிவு பணியாளர்கள் தவிர வேறு எவரும் அப்பகுதிகளிலிருந்து வெளியே செல்லமுடியாது.

அதேபோன்று  Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் இயங்கும் அத்தியாவசிய துறைக்குள் அடங்காத வர்த்தக நிலையங்கள் இன்று நள்ளிரவுமுதல் மூடப்படும். இந்த வணிகங்கள் "click and collect", takeaway மற்றும் delivery சேவைகள் மாத்திரம் வழங்கமுடியும்.

Supermarkets, petrol stations, pharmacies, banks, hardware shops, pet shops, post offices, newsagents மற்றும் office supply shops போன்ற வணிகங்கள் தொடர்ந்தும் நுகர்வோருக்காக திறந்திருக்கும்.

இதுதவிர திங்கட்கிழமை நள்ளிரவு முதல் சிட்னியின் அனைத்து கட்டுமான பணிகளும் இடைநிறுத்தப்படும். வீடுமனைகளுக்கான அவசரமற்ற திருத்தவேலைகள் மற்றும் துப்புரவுப் பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்.

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்பதுடன் வேலை, கல்வி(வீட்டிலிருந்து வேலைசெய்ய அல்லது கல்விகற்க முடியாதபட்சத்தில் மாத்திரம்) பராமரிப்பு வழங்க அல்லது பெற, அத்தியாவசிய பொருட்களை வாங்க மற்றும் உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய தேவையின்நிமித்தம் மாத்திரமே வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.

புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகமாகவே இருப்பதால் மக்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் Premier Gladys Berejiklian கோரிக்கைவிடுத்துள்ளார்.

நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியிருப்பதாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கை பூச்சியமாக அல்லது அதற்கு அண்மையாக இருக்கும்போது மட்டுமே முடக்கநிலையை தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் Gladys Berejiklian தெரிவித்தார்.

அதேநேரம்  வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள  ஆறு பேருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 81,970 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் Premier Gladys Berejiklian வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்பரவல் ஆரம்பித்திருந்தது.

இதேவேளை புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.health.nsw.gov.au என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.

ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் கோவிட் சோதனையை எங்கே மேற்கொள்ளலாம் என்ற விவரங்களை கீழுள்ள இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 

ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் கோவிட் பேரிடர்கால கொடுப்பனவு எவ்வாறு உள்ளது என்பதை கீழுள்ள இணைப்புக்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory

ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.

NSW Travel & transport and Quarantine

VIC Travel permitOverseas travellers and Quarantine

ACT Transport and Quarantine

NT Travel and Quarantine

QLD Travel and Quarantine

SA Travel and Quarantine

TAS Travel and Quarantine

WA Travel and Quarantine

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும். இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப்போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


4 min read

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now