SKIP TO MAIN CONTENT

சிறுமியைக் கொல்ல கூட்டுச்சதி? மேற்கு ஆஸ்திரேலிய மருத்துவரும் பெண்ணும் கைது!

மேற்கு ஆஸ்திரேலியாவில் 6 வயதுச் சிறுமியை கொலைசெய்யத் திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பெண் மற்றும் மருத்துவர் ஒருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

AAP Images/  Moodboard
Source: AAP Images/ Moodboard

2 min read

Published

Updated


Skip to article content

ஆறு வயதுச் சிறுமிக்கு அளவுக்கதிகமாக மருந்தொன்றைக் கொடுத்து, கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மேற்கு ஆஸ்திரேலிய பொலீஸார், குறித்த பெண்ணுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் 47 வயது மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த மருந்தினைக் கொள்வனவு செய்வதற்கான prescription-மருந்துச்சீட்டினை அப்பெண் எதற்காக கேட்கிறார் என்பது மருத்துவருக்கு தெரிந்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சட்டத்திற்குப் புறம்பாக ஆறு வயதுச் சிறுமியைக் கொலை செய்யத் திட்டமிட்டார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இருவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் குறித்த சிறுமியின் நெருங்கிய உறவினர் என நம்பப்படுகிறது.

சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மற்றுமொரு உறவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றதாகவும், அங்கிருந்து அச்சிறுமி பெர்த் சிறுவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து குறித்த சிறுமிக்கு மருந்துப்பொருளொன்றைக் கொடுத்து கொலைசெய்ய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் 40 வயதுப்பெண் ஜனவரி 28ம் திகதி கைதுசெய்யப்பட்டதாகவும், அவருக்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த மருத்துவர் பெப்ரவரி 2ம் திகதி கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் பெப்ரவரி 16ம் திகதி Stirling Gardens Magistrate நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now