SKIP TO MAIN CONTENT

மேற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெற்றி!

Dr.Krishnan
Source: Dr.Krishnan(Facebook)

1 min read

Published

Updated


Skip to article content

மேற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுமுடிந்த மாநில நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி  சார்பில் போட்டியிட்ட ஜகதீஷ் கிருஷ்ணன் வெற்றிபெற்றுள்ளார். 

இவர் தமிழ் பின்னணி கொண்டவர் என்பதோடு மருத்துவத் தொழில் செய்கிறார்.மேற்கு ஆஸ்திரேலியாவின் Riverton தொகுதியில் இவர் போட்டியிட்டிருந்தார்.

இவர் தவிர இந்திய பின்னணிகொண்ட மேலும் இருவர் இத்தேர்தலில் வென்று மேற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் பிறந்த Dr.ஜகதீஷ் கிருஷ்ணன் மேற்படிப்புக்காக லண்டன் சென்று பின்னர் அங்கிருந்து 2006ம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் குடியேறினார்.

குடும்ப மருத்துவராக Byford பகுதியில் சுமார் 4 ஆண்டுகள் பணியாற்றிய இவர் தனது சொந்த நிறுவனமான Perth GP என்பதை நிறுவி வெற்றிகரமாக அதை நடத்திவருகிறார்.

Royal Australian College of General Practitioners இன் உயர் விருது மற்றும் Sam Bada IMG Support Award போன்ற விருதுகளுக்குச் சொந்தக்காரரான இவர் காற்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவர். காற்பந்து விளையாட்டில் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் Dr.ஜகதீஷ் Western Knights Soccer Club-இன் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ள அதேநேரம் Western Knights Masters அணிக்காக தற்போதும் விளையாடுகிறார்.

Dr.யாமினியைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு தீக்சனா மற்றும் சிறிதர் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now