வெளியிடங்களில் வெப்பநிலை உச்சம் தொடும் போது உடற்பயிற்சி செய்யலாமா?

அதிக சூடான நாட்களில் வெளி இடங்களில் உடற்பயிற்சி செய்வது ஒருவரின் உடல் உறுப்புகளை நிரந்தரமாக சேதப்படுத்தும் என்று மருத்துவ ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும் நாட்களில் வெளி இடங்களில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். SBS செய்திகளுக்காக Sydney Lang எழுதிய விவரணத்தை, SBS தமிழ் ஒலிபரப்பிற்காக குலசேகரம் சஞ்சயன் தயாரித்துள்ளார்.

A bare-chested man in black shorts is pushing over a truck tyre in the sun

How hot is too hot to exercise outside? Source: SBS

Key Points
  • கோடை காலம் தொடங்குவதால், பலர் வெளி இடங்களில் உடற்பயிற்சி செய்கிறார்கள்.
  • அதிக சூடான நாட்களில் வெளி இடங்களில் செய்யும் உடற்பயிற்சி உடல் உறுப்புகளை நிரந்தரமாக சேதப்படுத்தும் என்பதற்கு மருத்துவ ஆதாரங்கள் உள்ளன.
  • உங்கள் உடல் சூடாகத் தொடங்கும் போது முதலில் பாதிக்கப்படுவது மூளை தான் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
ஆஸ்திரேலியாவில் கோடைகாலம் துவங்கி, வெப்பநிலை தொடர்ந்து உச்சத்தைத் தொட்டு வருவதால், கடுமையான வெப்பநிலை நாட்களில் வெளியே உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த உச்சி வெய்யில் வெப்பநிலை எவ்வளவு ஏறினாலும், Bondi Beach என்ற இடத்தில் வழமையாக வெளிப் புறத்தில் நின்று உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அது ஒரு தடையே இல்லை. உடற்பயிற்சி செய்யாமலிருக்க வானிலை மீது பழி போடக் கூடாது என்கிறார்கள் அவர்களில் சிலர்.


A bare-chested man in pink shorts is lifting weights on a bench in the sun
Bondi outdoor gym is typically bustling even on the hottest days. Source: SBS
தீவிர வெப்பத்தில் உடற்பயிற்சி செய்வது உடலில் நிரந்தர விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது என்று கூறுகிறார் Australian National University ஆராய்ச்சியாளர் Doctor Simon Quilty. Northern Territoryயில் வெப்பநிலை எப்படி மக்களின் உடல் நலத்தைப் பாதிக்கிறது என்பது குறித்து முனைவர் பட்டம் பெற்றவர் அவர். வெப்பமான காலநிலையில் நீண்ட நேரம் உடல் உழைப்பு செய்பவர்கள் மீது அதன் தாக்கம் கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் தான் மருத்துவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என்கிறார் Doctor Simon Quilty.
A headshot of a man in a blue shirt with trees in the background
Dr Simon Quilty is an ANU specialist physician and heat researcher. Credit: Australian National University
உங்கள் உடல் சூடாகத் தொடங்கும் போது முதலில் பாதிக்கப்படுவது மூளை தான் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

அதிக வெப்ப நிலையில் உடற்பயிற்சி செய்வது உங்கள் உறுப்புகளை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், அப்படி உடற்பயிற்சி செய்பவர் ஒருவர் ஆபத்தான முடிவெடுக்கவும் வழிவகுக்கும் என்கிறார் Doctor Simon Quilty.


நாட்டைச் சுற்றிலும் பல இடங்கள் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், வெப்பத்திற்கு ஏற்றவாறு எமது உடல்கள் மாற்றிக் கொள்ள அனுமதிப்பது முக்கியம் என்று Doctor Simon Quilty கூறுகிறார்.
People on a beach
Sydney just experienced its hottest first fortnight of summer in more than 160 years of records. Source: AAP / Brent Lewin
பெரும்பாலும் குளிர்ந்த காலநிலையில் உள்ளவர்களை விட, வெப்பமான சூழலில் வாழ்பவர்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவர்கள் என்று அவர் கூறுகிறார். ஆனால், குளிரூட்டப்பட்ட இடங்களில் அதிக நேரத்தை செலவிடுபவர்களின் சூட்டைத் தாங்கும் திறன் மற்றவர்களை விடக் குறைவாகவே இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

மிகச் சிறந்த உடற் கட்டமைப்புக் கொண்டவர்கள் கூட, வரம்புகளை அதிகமாக மீறினால், அதிகமாகப் பாதிப்படையக் கூடிய அபாயம் உள்ளது என்று Doctor Simon Quilty எச்சரிக்கிறார்.



A person running with the sun low in the sky in the background
Instead of going for a run after work, where you've been in a comfortably cool room all day, experts suggest jogging early in the morning before the sun rises. Source: AAP / Michael Probst
கோடை கால வெப்பநிலை முன்னெப்போதுமில்லாத அளவு அதிகரித்து செல்கையில், உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் அதனை, நாளின் சிறந்த பகுதியான அதிகாலையில் உடற்பயிற்சி செய்யவும் என்று Doctor Simon Quilty அறிவுறுத்துகிறார். உங்கள் உடற்பயிற்சி உங்கள் வாழ்வின் இறுதி மூச்சாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ளும்படி அவர் எச்சரிக்கிறார்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated

By Shivé Prema, Svetlana Printcev, Kulasegaram Sanchayan
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
வெளியிடங்களில் வெப்பநிலை உச்சம் தொடும் போது உடற்பயிற்சி செய்யலாமா? | SBS Tamil