கோவிட் தடுப்பூசிக்கு எதிராக Facebook உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் அபாண்டமான - உண்மைக்கு புறம்பான - கருத்துக்களை பகிர்ந்துவருபவர்களை ஆஸ்திரேலிய பொலீஸாரிடம் முறையிடுவது தொடர்பில் ஆலோசித்துவருவதாக Therapeutic Goods Administration-TGA தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட வயதெல்லைகளுக்கு ஏற்ப கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், தடுப்பூசிக்கு எதிராக சமூக வலைத்தள பிரச்சாரங்கள் பல மட்டங்களில் இடம்பெற்றுவருவதாகவும், தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக பகிரங்கமான வசைகள் பதிவுசெய்யப்படுவதாகவும் TGA தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் கோவிட் தடுப்பூசி தொடர்பான உண்மைக்கு புறம்பான - அபாண்டமான - தகவல்கள் பகிரப்பட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கும் வகையில் வதந்திகள் கூறப்படுவதாகவும் TGA சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப்பின்னணியில், கோவிட் தடுப்பூசி பற்றி பொய் பரப்பும் பதிவுகள் மற்றும் பதிவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளும்வகையில் பொலீஸாரிடம் முறையிடக்கூடும் என TGA தெரிவித்துள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


