புதிய திரிபடைந்த Omicron தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பெண் ஒருவர் சிட்னி மற்றும் Central Coast பகுதிகளிலுள்ள பல இடங்களுக்குச் சென்றுவந்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்க நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா வருவோருக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னதாக சிட்னியை வந்தடைந்த குறித்த பெண்ணுக்கு இன்றையதினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
30 வயதுகளிலுள்ள இப்பெண் கட்டார் எயார்வேஸ் மூலம் டோஹாவிலிருந்து சிட்னியை வந்தடைந்ததாகவும், இவர் தென்னாபிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிட்னியை வந்தடைந்த பின்னர் Westfield Parramatta உட்பட பல இடங்களுக்கு இவர் சென்றுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, கீழ்க்காணும் இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் உடனடியாக கோவிட் சோதனை செய்துகொள்ளுமாறும், சோதனை முடிவு தெரியவரும்வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவித்துள்ளது.
Friday, November 26:
- Coles Top Ryde, Ryde (9:30am to 10:45am)
- Target at Westfield Parramatta (10:45am to 11am)
- H&M at Westfield Parramatta (11am to 11:15am)
- Athlete's Foot at Westfield Parramatta (11:15am to 11:30am)
- JD Sports at Westfield Parramatta (11:15am to 12pm)
- Rebel Sports at Westfield Parramatta (12pm to 12:45pm)
- IGA North Wyong (6:15pm to 7pm)
- Pizza Hut Wyong (7pm – 7:15pm)
- KFC North Wyong (7:15pm to 7:30pm)
- Woolworths Wadalba (7.30pm to 8:15pm)
Saturday, November 27:
- Aldi Toukley (4:45pm to 5:45pm)
வெளிநாடுகளிலிருந்து சிட்னி வந்தடைந்த 5 பேருக்கு Omicron தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.