Explainer

2023க்கான ஐந்து ஆஸ்திரேலிய விசா வாய்ப்புகள்!

புதிய அரசு இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் குடிவரவு திட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தநிலையில் 2023 இல் என்ன விசா வாய்ப்புகள் உள்ளன என்ற தகவல்கள்.

Australian visa

Source: AAP / Visa (AAP)

பிரதமர் Anthony Albanese தலைமையிலான புதிய அரசு ஆஸ்திரேலியாவின் குடிவரவு கொள்கைகளில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது. அத்துடன் கடந்த மே மாதம் பதவிக்கு வந்ததில் இருந்து ஏற்கனவே தேங்கிக்கிடந்த விசா விண்ணப்பங்களின் பரிசீலனையையும் விரைவுபடுத்தத் தொடங்கியது.

2023 இல் இன்னும் அதிகமான மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Skilled migration தொழில் பட்டியல்களின் செயல்திறனை மறுஆய்வு செய்ய முயற்சிப்பதாக அரசு உறுதியளித்துள்ளது.

தற்போதைய skilled migration தொழில் பட்டியலின் கடைசிப் புதுப்பிப்பு 11 மார்ச் 2019 அன்று செய்யப்பட்டது. இது காலாவதியாகிவிட்டதாக சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே, skilled migrants மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான விசாக்களை உள்ளடக்கிய permanent migration திட்டத்தை 2022/23 இல் 160,000 இடங்களிலிருந்து 195,000 இடங்களாக உயர்த்துவதாக அரசு அறிவித்தது.

இதையடுத்து skilled விசாக்களின் எண்ணிக்கை 79,600 இலிருந்து 142,400 ஆக கணிசமாக அதிகரிக்கப்படுவதாக அக்டோபர் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதில் employed sponsored, skilled independent, regional அத்துடன் state and territory nominated விசாக்கள் அடங்கும்.

Temporary skill shortage (TSS) subclass 482 விசாக்களில் மாற்றங்களை அரசு அறிவித்தது. இது மக்களை நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும்.

இதுதவிர subclass 457 விசா வைத்திருப்பவர்களுக்கான வயதுக் கட்டுப்பாடுகளை அரசு நீக்குவதுடன் subclass 462 working holiday maker விசாக்களுக்கான தகுதியை விரிவுபடுத்துகிறது.
There's a number of visa changes coming in 2023
There's a number of visa changes coming in 2023 Credit: SBS News
இதுஒருபுறமிருக்க தற்காலிக பாதுகாப்பு விசாவில் உள்ள 19,000 க்கும் மேற்பட்ட அகதிகள் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு புதிய ஆண்டில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இது அரசால் உறுதிப்படுத்தப்படவில்லை என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் 2023க்கான ஐந்து முக்கிய விசா வாய்ப்புகள் கீழே தரப்பட்டுள்ளன

1. குறிப்பிட்ட நாடுகளுக்கான புதிய விசா

பசிபிக் நாடுகள் மற்றும் Timor Lesteவிலிருந்து தகுதியான குடியேற்றவாசிகளுக்கு 3,000 இடங்களை வழங்கும் புதிய விசா ஜூலை 2023 இல் அறிமுகப்படுத்தப்படும்.

ஆஸ்திரேலியாவின் நிரந்தர குடிவரவு திட்டத்தில் கிடைக்கும் இடங்களுக்கு மேலதிகமாக இந்த Pacific Engagement விசாக்கள் வழங்கப்படும்.
Homes among trees on flat ground. The sea is in the background.
Workers from Pacific countries such as the Solomon Islands will have access to a new Australian visa from 1 July 2023. Source: AP / Mark Schiefelbein

2. நியூசிலாந்து நாட்டவர்களுக்கான முன்னுரிமை (Priority processing )

New Zealand streamஇல் Skilled Independent (Subclass 189) விசா விண்ணப்பங்களின் பரிசீலனைக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நியூசிலாந்து நாட்டவர்கள் பயனடைவார்கள்.

அத்துடன் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ஐந்து வருடங்கள் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்திருக்க வேண்டும் மற்றும் அவர்கள் சில வரி விதிக்கக்கூடிய வருமான வரம்புகள் மற்றும் சுகாதார அளவுகோல்களை சந்திக்க வேண்டும் என்பது உட்பட சில விசா நிபந்தனைகளை குடிவரவு திணைக்களம் கைவிட்டுள்ளது.

ஏற்கனவே தேங்கிக்கிடக்கும் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்கும்நோக்கில், இந்தப்பிரிவின்கீழ் புதிய விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை 10 டிசம்பர் 2022 முதல் ஜூலை 1, 2023 வரை திணைக்களம் நிறுத்தியுள்ளது.

குறித்த விசா வழங்கப்பட்டவர்கள், ஆஸ்திரேலியாவில் பிறந்த குழந்தைகளுக்கான National Disability Insurance Scheme மற்றும் ஆஸ்திரேலிய குடியுரிமை ஆகியவை உட்பட நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான பலன்களை விரைவாக பெறமுடியும்.

New Zealand stream விசா வழங்கப்பட்டவர்களுக்கும் 1 ஜனவரி 2023 முதல் அவர்களின் குடியுரிமை விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்படும்.
Air New Zealand
Air New Zealand Source: Pixabay / Image by Thierry BEUVE from Pixabay

3. State-sponsored விசாக்கள்

மாநிலம் மற்றும் பிராந்தியங்கள் மூலம் கிடைக்கும் விசாக்களின் எண்ணிக்கை, பெரிய regional ஒதுக்கீட்டின் காரணமாக, வியத்தகு அளவில் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2022/23 ஆம் ஆண்டில் state and territory nominated விசாக்களில் (subclass 190) 31,000 இடங்களையும், regional category (subclass 491) விசாக்களில் மேலும் 34,000 இடங்களையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இவற்றில் பெரும்பாலானவை மாநில மற்றும் பிராந்திய அரசுகளால் பரிந்துரைக்கப்படும்.

Business innovation and investment program (subclass 188) க்கு மேலும் 5,000 இடங்கள் கிடைக்கும்.

2018/19 ஆம் ஆண்டில், கோவிட் பரவல் ஆஸ்திரேலியாவின் குடிவரவு எண்ணிக்கையை வியத்தகு முறையில் பாதிக்கும் முன், சுமார் 25,346 state and territory nominated விசாக்கள் வழங்கப்பட்டன. மற்றும் 647 skilled regional விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
A breakdown of the skilled visas available in the 2022/23 budget
A breakdown of the skilled visas available in the 2022/23 budget.
மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் தங்கள் skilled occupation பட்டியல்கள் உட்பட பல நிபந்தனைகளை அதிகளவில் தளர்த்தியுள்ளன. இதனால் மக்கள் state-nominated விசாக்களுக்கு விண்ணப்பிப்பது எளிதாகிறது.

State-sponsored விசாவின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, ஒரு குறிப்பிட்ட முதலாளியுடன் பிணைக்கப்படாமல் இருப்பது - எனினும், விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும் மற்றும் அவர்களது சொந்த வேலைகளையும் கண்டுபிடிக்க வேண்டும்.

மிக சமீபத்தில் NSW அதன் skilled nominated visas (Subclass) 190 விசா விண்ணப்பதாரர்களுக்கான நிபந்தனைகளை மாற்றியது.

"Skilled Independent visa (subclass 189) தற்போது அதிகளவில் கிடைப்பதால், Skilled Nominated Subclass 190க்கு முன்னர் வெளியிடப்பட்ட minimum point scores மற்றும் பணி அனுபவத்திற்கான புதிய நிபந்தனைகள் அகற்றப்பட்டுள்ளன" என்று NSW மாநில அரசின் இணையதளம் கூறுகிறது.

4. எளிதான குடும்ப மறு இணைவு

Albanese அரசு குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதை எளிதாக்கியுள்ளது. இதன்படி 2022/23 இல் demand-driven partner விசாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் பொருள் வழங்கப்படவுள்ள இந்த விசாக்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்பதாகும். இந்த நிதியாண்டில் சுமார் 40,500 partner விசாக்கள் வழங்கப்படும் என்று திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான விசாக்களும் தேவையை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன் 3,000 விசாக்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Woman in face mask welcoming her husband at airport
Family reunions will be easier with no limit to partner and child visas. Source: Getty / jacoblund/iStockphoto

5. விசா விண்ணப்ப பரிசீலனை முன்னுரிமையில் மாற்றம்

இதுவரை காலமும் Skilled விசா விண்ணப்பங்களை தரவரிசைப்படுத்த PMSOL- Priority Migration Skilled தொழில் பட்டியலை பயன்படுத்திவந்தநிலையில், இதனை உள்துறை அமைச்சகம் நிறுத்தியுள்ளது.

இதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான Skilled விசா விண்ணப்பங்கள், தற்போது வெறும் மூன்றே நாட்களில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

விசா பரிசீலனை ஊழியர்களை சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தும் புதிய Ministerial Direction No. 100, இப்போது சுகாதாரம் மற்றும் கல்வித் துறை விசாக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

புதிய வழிகாட்டுதலின் கீழ், skilled விசா விண்ணப்பங்கள் பின்வரும் முன்னுரிமை வரிசையில் முடிவு செய்யப்படுகின்றன:

1. உடல்நலம் அல்லது கற்பித்தல் தொழில்சார் விண்ணப்பங்கள்(Healthcare or teaching)

2. Employer-sponsored விசாக்கள். Accredited Statusஉடன் அங்கீகரிக்கப்பட்ட ஸ்பான்சரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்.

3. நியமிக்கப்பட்ட regional பகுதிக்கானவை.

4. நிரந்தர மற்றும் தற்காலிக விசா துணைப்பிரிவுகள். Subclass 188 (Business Innovation and Investment (Provisional)) விசாவைத் தவிர்த்து, குடியேற்றத் திட்டத்தில் கணக்கிடப்படும் விசா விண்ணப்பங்கள்.

5. மற்ற அனைத்து விசா விண்ணப்பங்களும்.

மேலே உள்ள அனைத்து வகைகளும், அனைத்து நாட்டினருக்கும் திறக்கப்படாததால், தகுதியான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒவ்வொரு வகையிலும், ஆஸ்திரேலியாவிற்கு வெளியே உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

By Charis Chang
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand