உமிழ் நீரை சோதனை செய்வதன் மூலம் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்று ஐந்து நிமிடங்களில் பெறுபேற்றினை வெளிப்படுத்தக்கூடிய புதிய தொழில்நுட்ப வழிமுறையை விக்டோரிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Highlights
- ஐந்து நிமிடத்தில் கோவிட் சோதனை முடிவைத் தரக்கூடிய தொழில்நுட்பத்தினை விக்டோரிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- Infrared light துணைகொண்டு இந்த புதிய சோதனை தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
- சோதனை செய்யக்கூடிய வேகம், எளிமை, செலவு குறைவு உள்ளிட்ட பல நன்மைகள் இத்தொழில்நுட்பத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாசியில் மேற்கொள்ளப்படும் கோவிட் சோதனையை விட மிக வேகமான பெறுபேறுகளை தரக்கூடிய இந்த புதிய தொழில்நுட்பத்தினை Monash பல்கலைக்கழகம் மற்றும் Peter Doherty Institute for Infection and Immunity ஆகியன இணைந்து கண்டுபிடித்துள்ளன.
கோவிட் சோதனையில் வேகமாக பெறுபேற்றை தரக்கூடிய இந்த தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட உபகரணம் ஒன்றினை நாள் ஒன்றுக்கு ஐயாயிரம் சோதனைகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் விமான நிலையங்கள், விளையாட்டு அரங்குகள், பாடசாலைகள் போன்ற கோவிட் சோதனைகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டிய இடங்களில் இந்த கருவியை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Infrared light எனப்படுகின்ற கண்ணுக்கு புலப்படாத மின்காந்த அலையின் துணைகொண்டு இந்த புதிய சோதனை தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சோதனை செய்யக்கூடிய வேகம், எளிமை, செலவு குறைவு உள்ளிட்ட பல நன்மைகள் இத்தொழில்நுட்பத்தில் உள்ளதாகவும் ,சோதனையை மேற்கொள்பவர் மற்றும் சோதனைக்குட்படுபவருக்கு இலகுவாக இருக்கும் என்றும் Monash பல்கலைக்கழக பேராசிரியர் Bayden Wood கூறியுள்ளார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


