சுமார் 86 நாட்களாக சமூகப் பரவல் ஊடான கோவிட் தொற்று எதுவுமற்ற மாநிலமாக தன்னை பிரகடனம் செய்திருந்த விக்டோரியாவில், இன்று நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மெல்பனின் வட பகுதியில் அமைந்துள்ள Whittlesea பிரதேசத்தை சேர்ந்த 3 வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விக்டோரிய சுகாதார அமைச்சர் Martin Foley தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சர் Martin Foley மேலும் கூறும்போது - இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டபோது தொற்றுக்கு உள்ளானநிலையில் விக்டோரியா திரும்பிய நபர் சென்றிருந்த இடங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பேதுமிருப்பதாக இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியவில்லை. இவர்களோடு தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் இவர்கள் கடந்த சில நாட்களாக நடமாடிய இடங்கள் தொடர்பான விசாணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன - என்று தெரிவித்துள்ளார்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சமூகமளித்தவர்கள் உடனடியாக கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
JUMP! Swim Schools Bundoora May 21 between 8.55am and 10.15am
High Point Shopping Centre in Maribyrnong May 20 between 5pm and 8pm
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share

