NSW மாநிலத்தில் மிக ஆபத்தான Delta வகை கொரோனா வைரஸ் பரவல்!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக கோவிட் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

NSW Premier Gladys Berejiklian speaks to media

NSW Premier Gladys Berejiklian speaks to media Source: AAP

Highlights
  • நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • மிக ஆபத்தான திரிபடைந்த Delta வகை கொரோனா வைரஸ் தொற்று மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
  • சிறியளவிலான அறிகுறிகள் தோற்றினாலும் உடனடியாக கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்றையதினம் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில் இன்று மேலும் இருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு நேற்றையதினம் முதன்முதலாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த நபரின் மனைவிக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதேநேரம் குறித்த ஓட்டுநருக்கு ஏற்பட்டிருப்பது இந்தியாவில் முதன்முதலில் இனங்காணப்பட்ட மிகவும் ஆபத்தான Delta வகை கொரோனா வைரஸ் தொற்று என மாநில தலைமை சுகாதார அதிகாரி Dr Kerry Chant தெரிவித்தார்.

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் முதல்தடவையாக இவ்வகை வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மரபணு மாதிரி பரிசோதனையின் அடிப்படையில், குறித்த பரவல் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவலுடன் தொடர்புபடவில்லை எனவும் அமெரிக்காவிலிருந்து வந்திருப்பதற்கான சாத்தியமே உள்ளதாகவும் அவர் கூறினார்.
தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஓட்டுநரும் அவரது மனைவியும் சிட்னியின் பல இடங்களுக்கு சென்றிருந்தநிலையில் அந்த இடங்கள் அனைத்தும் exposure sites பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இந்தப்பின்னணியில் இன்றையதினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 70 வயதுப் பெண் குறித்த பட்டியலில் இடம்பெற்ற Bell Cafe(Vaucluse)-க்குச் சென்றிருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மற்றுமொரு நபர் Baulkham Hills பகுதியைச் சேர்ந்த 40 வயதுகளிலுள்ள ஒருவர் எனவும் இவரது கோவிட் சோதனை முடிவு தவறானதாகவோ அல்லது பல நாட்களுக்கு முன்னர் தொற்று ஏற்பட்ட நபராகவோ இருக்கக்கூடும் எனவும் இதுதொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாகவும் Premier Gladys Berejiklian  தெரிவித்தார்.

இந்நபருக்கும் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவலுக்கும் இடையில் தொடர்பெதுவும் இல்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து தனிமைப்படுத்தலில் உள்ள ஒருவருக்கும் புதிதாக கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நியூசவுத் வேல்ஸ் மாநில மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவெண்டுமெனவும் அதிகளவில் மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்லவேண்டாம் எனவும் Premier Gladys Berejiklian வலியுறுத்தினார்.

அதுமட்டுமல்லாமல் சிறியளவிலான அறிகுறிகள் தோற்றினாலும் உடனடியாக கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு தேவைக்காக பின்வரும் இடங்களுக்கு குறிப்பிட்ட  நேரங்களில் சென்றவர்கள் உடனடியாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tuesday, June 15
  • Harry's Coffee Kitchen at 500 Oxford Street Bondi Junction from 3:00pm to 3:40pm
  • NAB (in Westfield) at 500 Oxford Street Bondi Junction from 2.45pm to 3.10pm
  • Cemetery Cafe Macquarie Park at Macquarie Park Cemetery, Corner Delhi Rd & Plassey Rd North Ryde from 1:00pm to 1:20pm
 
Monday, June 14
  • Rocco's at 103B Laguna Street Vaucluse from 10:55am to 11:30am
  • Coles, East Village Shopping Centre at O'Dea Avenue Zetland from 11:00am to 1:00pm
  • Taste growers — fruit and veggie shop, East Village Shopping Centre at Shop 39/2 Defries Avenue Zetland from 11:00am to 1:00pm
  • Wax Car Wash Cafe at 375 Cleveland Street Redfern from 12:00pm to 3:00pm
 
Sunday, June 13
  • Event Cinemas Bondi Junction from 1:30pm to 4pm. Any person who attended the 1:45pm screening of the Hitman's Wife's Bodyguard in cinema 1.
 
Saturday, June 12
  • David Jones Bondi at 500 Oxford Street Bondi Junction from 11:00am to 11:40am
  • Myer Bondi at 500 Oxford Street Bondi Junction from 11:40am to 12:15pm
  • Washoku Vaucluse at 52 New South Head Road Vaucluse from 12:00pm to 1:30pm
 
Friday, June 11 
  • Sourdough Bakery at 500 Oxford Street Bondi Junction from 12:40pm to 1:10pm
  • Belle Cafe at 103 New South Head Road Vaucluse from 9:15am to 9:50am
  • Field to Fork Vaucluse at 101 New South Head Road Vaucluse from 12:00pm to 4:00pm
 
பின்வரும் இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றவர்கள் உடனடியாக கோவிட் சோதனையை மேற்கொள்ளும் அதேநேரம் சோதனை முடிவு வரும்வரை தனிமைப்படுத்தலுக்கு  உள்ளாகுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
Tuesday, June 15
  • Fruitologist at 151 Bondi Road Bondi from 1:00pm to 2:00pm

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated

By Renuka

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand