இந்த voucherகள், Service NSW செயலி வழியாக அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் வழங்கப்படும். இந்த வருடம் பாடசாலை சென்ற மாணவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்படும் இந்தத் தொகையை பொழுது போக்கிற்கும் சுற்றுலா செல்வதற்கும் இந்தப் பணத்தை செலவிடலாம்.
நன்றி சொல்லத் தகுதியானவர்கள் NSW பெற்றோர்கள்
வீட்டிலிருந்து தமது பிள்ளைகளுக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுப்பதற்குப் பெற்றோர் விடாமுயற்சியுடன் செயல்பட்டதற்காகவும், அந்தப் பெற்றோர்கள் நன்றி சொல்லத் தகுதியானவர்கள் என்றும் Premier Dominic Perrottet கூறினார்.
இந்த voucherகள் வழங்குவதற்கு, மாநில அரசிற்கு 193 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் அவை அடுத்த வருடம் மற்றும் மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை செல்லுபடியாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மாநிலத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப 500 மில்லியன் டொலர்கள் செலவில் Dine & Discover மற்றும் புதிதாக Stay and Rediscover என்ற திட்டங்கள் ஊடாகவும் மாநில மக்கள் செலவழிக்க அரசு voucherகள் வழங்கி இருப்பது நாம் அறிந்த செய்திகள்.

Source: AAP
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.