SKIP TO MAIN CONTENT

இந்த வீதி விதிமுறைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? பாகம் 01

road rules
Source: Pixabay

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

நம்மை அறியாமலே நாம் பல வீதி விமுறைகளை மீறக்கூடும். அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

1.உங்கள் கார் கண்ணாடிகளை இறக்கிவிட்டபடி மிகவும் சத்தமாக பாடலைக் கேட்டபடி சென்றீர்களானால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு செய்பவர்கள் சட்டத்திற்கு கட்டுப்படத்தவறும்பட்சத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 200 டொலர்களும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 175 டொலர்களும் தண்டமாக செலுத்த நேரிடும்.

2.கார்களின் ஹோர்ன்களை தேவையற்ற காரணத்திற்கு பயன்படுத்தல். உதாரணமாக விடைபெறுவதற்காக(goodbye horn) பயன்படுத்தல்- இக்குற்றத்திற்கு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 298 டொலர்களும் விக்டோரியா மாநிலத்தில் 175 டொலர்களும் அபராதம் செலுத்த நேரிடும்.

3.Speed camera தொடர்பில் உங்களுக்கு முன்னால் வருகின்ற வாகன ஓட்டியை எச்சரிப்பதற்காக உங்கள் காரின் விளக்குகளை ஒளிரவைத்து சமிக்ஞை கொடுத்தல் - இக்குற்றத்திற்கு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 110 டொலர்களும் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் 100 டொலர்களும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 50 டொலர்கள் மற்றும் ஒரு demerit புள்ளி ஆகியவற்றை அபராதமாக செலுத்த நேரிடும்.

4.அதிவேகமாக மட்டுமல்ல ஆகக்குறைந்த வேகத்தில் வாகனத்தை ஓட்டிச்செல்வதும் தவறாகும். அநாவசியமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் மிகக்குறைந்த வேகத்தில் சென்று ஏனைய வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 253 டொலர்களும் 4 demerit புள்ளிகளும், விக்டோரியா மாநிலத்தில் 289 டொலர்களும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நீதிமன்றம் விதிக்கும் தொகையையும் அபராதமாக செலுத்த நேரிடும்.

5.கார் ஓட்டியபடி சாப்பிடுதல், குடித்தல், மேக்கப் சரிபார்த்தல் போன்ற கவனத்தை சிதறடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுதல்-இக்குற்றத்திற்கு நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT மாநிலத்தில் 448 டொலர்களும் 3 demerit புள்ளிகளும், மேற்கு ஆஸ்திரேலியாவில் 600 டொலர்களும் தெற்கு ஆஸ்திரேலியாவில் 184 டொலர்களும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நீதிமன்றம் விதிக்கும் தொகையுடன் 3 demerit புள்ளிகளையும், டஸ்மேனியாவில் 163 டொலர்களையும், Nothern Territory-யில் 500 டொலர்களையும் தண்டமாக செலுத்த நேரிடும்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now