SKIP TO MAIN CONTENT

இந்த வீதி விதிமுறைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?- பாகம் 02

Female Driver
Las infracciones de tránsito menos conocidas en Australia te pueden costar dinero. Source: Getty Images

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

நம்மை அறியாமலே நாம் பல வீதி விமுறைகளை மீறக்கூடும். அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

1. வீதியொன்றில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் 10 வீதம் அதிக வேகத்தில் சென்றால் அபராதம் விதிக்கப்படுவதில்லை என்ற நம்பிக்கை பல வாகன ஓட்டிகளிடம் உண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் ஒருசில கிலோமீட்டர்கள் அதிக வேகத்தில் சென்றால்கூட நீங்கள் தண்டிக்கப்படக்கூடும். பொலிஸ் அதிகாரிகள் சிலநேரங்களில் இரக்கம் காட்டக்கூடும். ஆனால் வேக கண்காணிப்பு கமராக்கள் இரக்கம் காட்டுவதில்லை. இதற்கான தண்டமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 119 டொலர்களும் 1 demerit புள்ளியும், மேற்கு ஆஸ்திரேலியாவில் 100 டொலர்களும் தெற்கு ஆஸ்திரேலியாவில் 174 டொலர்களும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 174 டொலர்களும், விக்டோரியாவில் 201 டொலர்களும் 1 demerit புள்ளியும் செலுத்த நேரிடும்.

2. வாகனம் ஓட்டும் போது உங்கள் கைபேசிகளை GPS-ஆக பாவிக்கும் போது அதனை காரினுள் நிலையான ஓரிடத்தில் பொருத்தியிருக்க வேண்டும். வாகனம் ஓட்டியபடியே Google Map போன்றவற்றுக்காக தொலைபேசியை பயன்படுத்தினால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தண்டப்பணத்துடன் 5 demerit புள்ளிகளையும், மேற்கு ஆஸ்திரேலியாவில் 400 டொலர்களும் தெற்கு ஆஸ்திரேலியாவில் 308 டொலர்களும் செலுத்த நேரிடும்.

3. வாகனம் ஓட்டும்போது உங்களுடன் பயணம் செய்பவர்கள் எவரேனும் குழந்தையை மடியில் வைத்திருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் Baby seat பயன்படுத்தவேண்டுமென்பது கட்டாயமாகும். இதனை மீறுபவர்கள் நாடுமுழுவதும் உள்ள சட்டத்தின்படி 500 டொலர்கள் தண்டப்பணமும் 3 demerit புள்ளிகளையும் அபராதமாக செலுத்த வேண்டும்.

4. இருட்டினுள் செல்லும்போது உங்கள் கார் விளக்குகளைப் போட மறந்தால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 112 டொலர்களும் 2 demerit புள்ளிகளும், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 130 டொலர்களும் 1 demerit புள்ளியும், விக்டோரியாவில் 211 டொலர்களும் 1 demerit புள்ளியும் தண்டமாக அறவிடப்படும்.

5. உங்கள் Number plate-வாகன இலக்கத்தகடு மீது தூசி படிந்து அதனை இனங்காணமுடியாதிருந்தால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 415 டொலர்களும் 3 demerit புள்ளிகளும், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 341 டொலர்களும்;, விக்டோரியாவில் 161 டொலர்களும் 3 demerit புள்ளிகளும் அபராதமாக செலுத்த வேண்டும்.

6. Footpath-நடைபாதையில் வாகனத்தை நிறுத்தி வைப்பவர்களுக்கு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 99 டொலர்களும், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 126 டொலர்களும், விக்டோரியாவில் 85 டொலர்களும் அபராதம் விதிக்கப்படும்.

7. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வீதியிலுள்ள குழிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை பஸ் வண்டிக்காக காத்திருக்கும் பயணிகள் மீது வாரியடித்துச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 177 டொலர்களுடன் 3 demerit புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.

8. Motorway-நெடுஞ்சாலையில் செல்லும் போது இன்னொரு வாகனத்தை முந்திச்செல்லும் நேரம் தவிர ஏனைய நேரங்களில் left lane-இடதுபக்கமாகவே செல்ல வேண்டுமென்பது நாமறிந்த பொது விதியாகும். இதனால் பலரும் இடமுமல்லாமல் வலமுமல்லாமல் நடுவிலே(middle lane) செல்வது வழக்கம். ஆனால் இடதுபக்கமாக செல்ல வாய்ப்பிருந்தும் வேண்டுமென்றே middle lane-இல் சென்றுகொண்டிருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். இதன்படி நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 2 demerit புள்ளிகளுடன் 108 டொலர்களும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 2 demerit புள்ளிகளுடன் 66 டொலர்களும் அபராதம் விதிக்கப்படும்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now