விக்டோரிய வாகன விபத்தில் இந்திய மாணவர் பலி!

இந்தியாவிலிருந்து கல்விகற்பதற்காக ஆஸ்திரேலியா வந்த மாணவர் ஒருவர் கடந்தவாரம் விக்டோரியாவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் பலியானார்.

2022-11-09_11-27-23.jpg

Sai Rohit Paladugu Credit: gofundme

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான Sai Rohit Paladugu என்ற மாணவரே இவ்வாறு விபத்தில் பலியானவர் ஆவார்.

கல்விகற்றுக்கொண்டே வேலையும் செய்து வந்த Sai Rohit, கடந்த நவம்பர் 3ம் திகதி காலை 6 மணியளவில், காரில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே மரமொன்றுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரியாவின் Seymour அருகே உள்ள Goulburn Valley Highway-இல் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

Sai Rohitஇன் தந்தை ஏற்கனவே காலமாகிவிட்ட சூழலில், தாயாரின் உதவியுடன் 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்த இவர், தாயாருக்கு உதவுவதற்காகவும் ஆஸ்திரேலியா வருவதற்காகப் பெற்ற கடனை அடைப்பதற்காகவும், கடுமையாக பாடுபட்டுவந்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் Sai Rohitஇன் உடலை இந்தியாவிற்கு அனுப்புவதற்கும், அவரது குடும்பத்திற்கு உதவுவதற்குமென gofundme ஊடாக நிதி சேகரிக்கப்பட்டுவருகிறது.

Telugu Association Of Australia-ஆல் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்நிதிசேகரிப்பில் இதுவரை 65 ஆயிரம் டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14.
More information and support with mental health is available at Beyond Blue.org.au 
and on 1300 22 4636. 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in   
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
Accident விக்டோரிய வாகன விபத்தில் இந்திய மாணவர் பலி! | SBS Tamil