கோவிட் முடக்கத்துக்குப் பின்னர் விக்டோரியாவில் விவாகரத்தினை நாடுகின்ற தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக குடும்ப நல சட்ட ஆலோசகர்களை மேற்கோள்காட்டி The Age செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ச்சியாக வீட்டிலிருந்து வேலை செய்தமை, அதனால் ஏற்பட்ட மன அழுத்தங்கள், குடும்பமாக வெளியில் போகமுடியாத முடக்கத்திற்குள் அகப்பட்டிருந்தமை என பல்வேறு காரணங்களினால் இந்த உறவுச்சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண முறிவு தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் தேசிய அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, விவாகரத்து தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு குடும்பநல வழக்கறிஞர்களை நாடியோரின் எண்ணிக்கை 2021-இல் 91 வீதத்தினால் அதிகரித்ததாகவும், விவாகரத்து தொடர்பான தகவல்களை வழங்கும் இணையத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் ஐம்பதினாயிரத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இணையத்தின் ஊடாக சட்ட ஆலோசனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 90 வீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உளவள ஆலோசகர்களிடம் பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கை 78 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
