SKIP TO MAIN CONTENT

கேரளத்து மீன் கறியுடன் புதுவருடத்தை வரவேற்ற ஆஸ்திரேலிய பிரதமர்!

BBQ Barramundi
Source: Facebook

2 min read

Published

Updated


Skip to article content

புதுவருடத்துக்கு முதல்நாள் இரவு BBQ Barramundi மற்றும் கேரள மீன் கறி சமையல் செய்து கொண்டாடியதாக ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison தனது முகநூலில் தெரிவித்திருக்கிறார்.

BBQ செய்வதற்கான Barramundi மீனை Nothern Territory,  Humpty Doo பகுதியிலிருந்து பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயல்பிலேயே சமையல் பிரியரான ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison, தான் பயணம் போகின்ற இடங்களில் எல்லாம், தனக்குப் பிரியமான உணவு வகைகளை சமைப்பதிலும் அவற்றைப் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொள்வதிலும் ஆர்வமுடையவர்.

சில மாதங்களுக்கு முன்னர் மெல்பனுக்கு விஜயம் செய்திருந்த சமயம், அவர் தோசை தயாரித்த காணொளியும் இத்தாலிய உணவகம் ஒன்றுக்கு சென்றபோது அவர்களுடைய உணவினைத் தயாரித்த காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now